சவுதி அரேபியாவில் பலூசிஸ்தான் குறித்து பாலிவுட் நடிகரான சல்மான் கான் பேசியிருந்த நிலையில், அவரை பயங்கரவாதி பட்டியலில் பாகிஸ்தான் சேர்த்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ரியாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சல்மான் கான், “பல நாட்டைச் சேர்ந்தவர்கள் இங்கு வேலை செய்கிறார்கள்.
பலூசிஸ்தானைச் சேர்ந்தவர்கள், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள், பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள் ” என்றார். இவருடைய இந்த பேச்சுக்கு கோபம் அடைந்த பாகிஸ்தான், அவரை பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்துள்ளதாக கூறப்படுகிறது.
