ஆரஞ்சு அலெர்ட்: நாளை இந்த மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை..? வெளியான தகவல்..!!

By Soundarya on ஐப்பசி 26, 2025

Spread the love

‘மோன்தா’ புயல் உருவாகும் காரணத்தால், புதுச்சேரியின் ஏனாம் பகுதியில் நாளை அக்.27 முதல் அக்.29 வரை பள்ளிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாளை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு “ஆரஞ்சு அலர்ட்” விடுக்கப்பட்டுள்ளதால், இங்கும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு விடுமுறை அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது  தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் மையம் கொண்டுள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுவடைய கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.