#image_title
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான ஏ.ஆர் முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து படம் எடுத்து வருகிறார். அதன் பணிகள் விழுறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் சல்மான் கானை வைத்து படம் எடுக்க ஏ ஆர் முருகதாஸுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது.
இதனால் சிவகார்த்திகேயனின் படத்தை ஒத்திவைத்துவிட்டு சல்மான் கான் படத்திற்கு திரைக்கதை அமைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். சிவகார்த்திகேயன் படத்தின் ஷூட்டிங் வேலைகள் முடிந்த பிறகு சல்மான்கான் நடிக்கும் படத்தை ஏ.ஆர் முருகதாஸ் இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாலிவுட் நடிகரான சல்மான்கான் எப்போதும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தனது படங்களை ரிலீஸ் செய்வார். கடைசியாக வீரம் படத்தின் ஹிந்தி ரீமேக்கான கிஸிகா பாய் கிஸிகா ஜான் திரைப்படம் சல்மான்கான் நடிப்பில் வெளியானது. ஆனால் இந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு ஏ.ஆர் முருகதாஸ் சல்மான்கான் நடிக்கும் படத்தின் டைட்டிலை வெளியிட்டுள்ளார்.
அந்த படத்திற்கு சிக்கந்தர் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ரம்ஜான் பண்டிகைக்கு சிக்கந்தர் படம் ரிலீஸ் ஆகும் என சல்மான் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் படே மியான் சோட்டே மியான் மற்றும் மைதான் உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என அல்லாஹ்வை வேண்டிக் கொள்வதாக சல்மான்கான் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.
நெதர்லாந்து அணியின் நட்சத்திர கால்பந்து வீரர் கோடி கப்போ, 2026 ஃபிஃபா உலகக்கோப்பை தொடரின் 'ரவுண்ட் ஆஃப் 32' சுற்றில்…
மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து வழங்கும் வேளாண் சார்ந்த நலத்திட்டங்கள், மானியங்கள் மற்றும் பிரதம மந்திரி கௌரவ நிதி,…
டல்லாஸ் நகரில் உள்ள கேத்ரின் பாடிஸ்டா என்பவரது வீட்டின் வரவேற்பறையில் உள்ள சோபாவில் அவரது வளர்ப்பு நாய் அமைதியாக ஓய்வெடுத்துக்…
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், சிதம்பரம் என்ற நடேசன்…
இண்டிகோ விமான நிறுவனத்தில் பணிபுரியும் அப்சல் என்ற காதுகேளாத மற்றும் பேச இயலாத ஊழியர், தனது அன்பான மற்றும் திறமையான…
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுகவை அடிமட்ட அளவில் இருந்து ஒட்டுமொத்தமாக மாற்றி அமைக்க அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின்…