Categories: சினிமா

“இதனால்தான் நான் சினிமாவில் யாரையும் லவ் பண்ணவில்லை…” – சரோஜா தேவி சொன்ன காரணம்!

Spread the love

தமிழ் சினிமாவில் கொஞ்சும் தமிழ் பேசி ரசிகர்களைக் கவர்ந்தவர் சரோஜா தேவி. கர்நாடகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட அவரை தமிழ் ரசிகர்கள் கன்னடத்துப் பைங்கிளி என்று சொல்லி அழைத்து கொண்டாடினர். இவர் தமிழில் 1957ஆம் ஆண்டு வெளியான தங்கமலை ரகசியம் படத்தின் மூலம் அறிமுகமானார்.

அவர் நடித்த படங்கள் ஹிட்டடித்த நிலையில் முன்னணி நடிகையானார். எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி, முத்துராமன் என பல முன்னணி தமிழ் நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார் நடிகை சரோஜா தேவி. தமிழில் மட்டுமே 100 படங்களுக்கு மேல் நடித்துள்ள அவர் கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.

இவர் கடைசியாக சூர்யா நடிப்பில் வெளியாகியிருந்த ஆதவன் படத்தில் நடித்திருந்தார். வயது முதிர்வு காரணமாக இப்போது அவர் எந்த படத்திலும் நடிப்பதில்லை. சரோஜா தேவி எத்தனையோ தமிழ்ப் படங்களில் நடித்திருந்தாலும் கடைசி வரை அவரின் மழலை தமிழ் மாறவே இல்லை. ஆதவன் படத்தில் கூட அவரின் மொழி மாறாமல் அப்படியே இருந்தது.

இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த ஒரு நேர்காணலில் தன்னுடைய இளமைக் கால அனுபவங்களை எல்லாம் பகிர்ந்துகொண்டுள்ளார். அதில் “நீங்கள் நடிக்கும் போது பேரழகியாக அறியப்பட்டவர். அப்போது உங்களுக்கு நிறைய காதல் கடிதங்கள் வந்திருக்கும். ஆனால் ஏன் நீங்கள் யாரையும் காதலிக்கவில்லை” என்று கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த சரோஜா தேவி “நான் சினிமாவுக்கு வந்த போதே என் அம்மா என்னிடம் சொல்லிவிட்டார். சினிமாவுக்கு போகிறாய். அங்கு காதல் போன்ற தவறிலெல்லாம் ஈடுபடக் கூடாது. நம் வீட்டில் இன்னும் பெண்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கும் நான் கல்யாணம் செய்யவேண்டும். நீ தவறு செய்தால் அவர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும் என சொல்லிவிட்டார். அதன் பிறகு எனக்கு எப்படி காதல் ஆசை வரும்” எனக் கூறியுள்ளார்.

அதே போல என் அம்மா என்னிடம் கல்யாணம் செய்துகொள்ள சொன்னபோதும் உடனடியாக திருமணம் செய்துகொண்டேன். நடிப்பை நிறுத்த சொன்னதும் அவர்தான். ஆனால் என் கணவர் என்னை நடிக்க சொன்னார். அதன் பிறகுதான் நடிக்க ஆரம்பித்தேன் எனக் கூறியுள்ளார்.

vinoth

Recent Posts

மும்பையில் பயங்கரம்… பள்ளிப் பேருந்து மீது வேரோடு சாய்ந்த மரம்… 11 வயது சிறுவன் பலியான பரிதாபம்….!

மும்பையின் செம்பூர் பகுதியில் பள்ளிப் பேருந்து மீது அரச மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில், 11 வயது சிறுவன் ஒருவன்…

9 மணத்தியாலங்கள் ago

நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி… விளையாடிக்கொண்டிருந்த குழந்தை மீது ஏறிய பைக்… மகாராஷ்டிராவில் கொடூரம்….!

மகாராஷ்டிராவின் அகோலா மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அன்று அரங்கேறிய துயரச் சம்பவம் ஒன்று ஒட்டுமொத்தப் பகுதியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலையில்…

9 மணத்தியாலங்கள் ago

நாத்தனாருக்கு 10% சொத்து, 50 கோடி வரதட்சணை… கல்யாண சந்தையில் அரங்கேறிய பகீர் சம்பவம்… வைரலாகும் சின்மயியின் ஆவேசப் பதிவு…!

திருமணம் என்பது இரு மனங்களும், இரு குடும்பங்களும் இணையும் புனிதமான பந்தமாகப் பார்க்கப்பட்ட காலம் போய், இன்று சில இடங்களில்…

10 மணத்தியாலங்கள் ago

“அட கொடுமையே… ஒரு போட்டோவிற்காக இந்த கொடூர சண்டை…? நடுரோட்டில் பாக்ஸிங் செய்து கொண்ட நேபாள இளைஞர்கள்…!”

பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பாதுகாப்புப் பணியாளர்களாக வேலை பார்த்து வரும் நேபாள நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் குழுவினர், ஞாயிற்றுக்கிழமை…

10 மணத்தியாலங்கள் ago

அடப்பாவிங்களா… இதென்ன அநியாயம்..?! குப்பை வண்டியில் கட்டி 1 கி.மீ இழுத்துச் செல்லப்பட்ட பசுவின் சடலம்… நெட்டிசன்களை கொதிக்க வைத்த வைரல் வீடியோ…!

மத்தியப் பிரதேச மாநிலம் பேதுல் மாவட்டத்தில் உள்ள ஜல்லார் கிராம ஊராட்சியில், உயிரிழந்த பசு ஒன்றின் உடல் குப்பை அள்ளும்…

10 மணத்தியாலங்கள் ago

ஐந்து நாட்கள், 30 கொடூரர்கள்… 13 வயது சிறுமிக்கு நேர்ந்த அந்த 5 நாள் நரகம்… ராஜஸ்தானை உலுக்கிய கொடூரம்…!

ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்கானகர் மாவட்டத்தில் 13 வயது சிறுமி ஒருவர் ஐந்து நாட்களில் 30-க்கும் மேற்பட்ட நபர்களால் கூட்டுப்…

10 மணத்தியாலங்கள் ago