CINEMA
விஜயை நம்பி பணம் போட்டது.. GOAT படத்திற்கு தளபதி வாங்கிய சம்பளம்.. அர்ச்சனா கல்பாத்தி சொன்ன தகவல்..!!
பிரபல நடிகரான விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் விஜய் அப்பா, மகன் என இரண்டு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். வருகிற ஐந்தாம் தேதி கோட் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. தனது 69-ஆவது படத்துடன் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் ஈடுபட போவதாக விஜய் ஏற்கனவே அறிவித்தார். விஜயின் 69 ஆவது படத்தை ஹச் வினோத் இயக்குகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கோட் படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகி மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தில் பிரபல நடிகரும், மறைந்த தேமுதிக தலைவரான விஜயகாந்த்தை AI தொழில்நுட்பம் மூலம் பயன்படுத்தியுள்ளனர். படத்தின் முதல் காட்சியிலேயே அவர் வருவதாக கூறப்படுகிறது. கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மட்ட பாடல் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாக்கி ஒரு பேட்டியில் கலந்து கொண்டு பேசினார்.
அவர் கூறியதாவது, இப்போது இருக்கும் சூழ்நிலையில் கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் விஜய். பிகில் படத்தின் மொத்த பட்ஜெட் 180 கோடி. ஆனால் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் பட்ஜெட் 400 கோடி. இந்த படத்தில் விஜய்க்கு மட்டுமே 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார். பிகில் படத்தை எடுக்கும்போது இருந்த நடிகர் விஜயின் மார்க்கெட்டும் இப்போது இருக்கும் மார்க்கெட்டும் ஐந்து வருட இடைவெளி. ஆனால் இந்த காலகட்டத்தில் விஜயின் மார்க்கெட் பல மடங்கு உயர்ந்துவிட்டது.
ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, வட இந்தியா வெளிநாடு என அனைத்து இடங்களிலும் அவரது மார்க்கெட் உயர்ந்து கொண்டே போகிறது. அதனால் தான் 200 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தும் எங்களால் லாபம் பார்க்க முடிகிறது அது மட்டும் இல்லாமல் 400 கோடி ரூபாய் செலவு செய்வதால் தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியும். அது மட்டும் இல்லாமல் நல்ல கதை வேண்டும் என்ற மன அழுத்தம் உள்ளது. என்னை பொருத்தவரை தளபதி விஜய் ஒரு கடினமான உழைப்பாளி. அவரை நம்பி தைரியமாக ஒரு ப்ராஜெக்ட்டில் இறங்கி படம் பண்ணலாம் என கூறியுள்ளார்.