ASTROLOGY
மிகவும் கஷ்டப்படுகிறீர்களா…? சனி பகவானின் தொல்லைகளில் இருந்து விடுபட 20 எளிய பரிகாரங்கள் இதோ…
நவக்கிரகங்களில் ஈஸ்வரன் பட்டம் பெற்றவர் சனீஸ்வர பகவான். சனி பகவானுக்கு நந்தன், ரவி புத்திரன், ஜடாதரன், ஆயுள்காரகன் என்று பல பெயர்கள் உண்டு. ஏழை பணக்காரர் என்ற வித்தியாசம் பாராமல் அவர்களுடைய கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை தருபவர் சனி பகவான்.
இந்திரனே ஆனாலும் சனியின் பிடியில் இருந்து தப்ப முடியாது என்று கூறுவர். சனியின் தசா புத்தி காலத்திலும் ஏழரைச் சனி அஷ்டம சனி கண்டக சனி போன்ற கோச்சார காலங்களிலும் சனிபகவான் அவரவருடைய கர்ம வினைகளுக்கு ஏற்ப தரும் பலன்களையும் இன்னல்களிலும் இருந்து யாராலும் தப்ப முடியாது. அந்த நேரத்தில் வாழ்க்கை மிகவும் கஷ்டமானதாக இருக்கும்.
சனீஸ்வர பகவான் தர்மவான் ஆவார். நாம் பாவங்கள் செய்திருந்தால் அதற்கான தண்டனையை தருவார். அதே போல் சனி காலம் நிறைவடைந்து அவர் நம் வாழ்க்கையை விட்டு நீங்கும்போது அள்ளியும் கொடுத்துவிட்டு செல்வார். ஒருவருக்கு சனீஸ்வர பகவானால் நேரம் ஆரம்பித்து விட்டால் அவரது தொல்லையிலிருந்து இன்னல்களில் இருந்து சற்று இளைப்பாற ஒரு சில 20 எளிய பரிகாரங்கள் இருக்கிறது. அவை என்னவென்று இனி காண்போம்.
முதலில் நம் வீட்டிலிருந்தே செய்யக்கூடிய எளிய பரிகாரமானது காகத்திற்கு சாதம் வைப்பது. சனிபகவானின் வாகனமான காகத்திற்கு சாதம் வைப்பதால் அவர் மனம் குளிருவார் என்பது ஐதீகம். அப்படி வெறும் சாதத்தை விட அதில் ஒரு ஸ்பூன் எள் கலந்து அந்த சாதத்தை எச்சில் படாமல் காகத்திற்கு வைக்க வேண்டும். சனிக்கிழமைகளில் சனிபகவானுக்கு இரும்பு அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றி வழிபடலாம்.
கருங்குவளை மலர்களால் சனி பகவானுக்கு அர்ச்சனை செய்யலாம். வன்னி மர இலைகளை மாலையாக தொடுத்து சிவபெருமானுக்கு சாற்றி வழிபட சனிபகவான் தொல்லையில் இருந்து தப்பிக்கலாம். சனியின் தொல்லையில் இருந்து தப்ப சனிக்கிழமை கண்டிப்பாக அசைவம் சாப்பிடக்கூடாது. சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் தேய்த்து குளிக்கும் போது இன்னல்கள் குறையும். ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு வடைமாலை அல்லது வெற்றிலை மாலை சாற்றி வழிபட்டால் சனிபகவானால் ஏற்படும் இன்னல்களில் இருந்து விடுபடலாம்.
ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால வேலையிலும் தேய்பிறை அஷ்டமி திதி வேளையிலும் காலபைரவரை வணங்கலாம். அனாதை இல்லங்கள் முதியோர் இல்லங்களுக்கு உதவிகளை செய்வது, ஏழை மாணவர்களுக்கு கல்விக்கு படிப்பு உதவி செய்வது, அன்னதானத்திற்கு உதவி, ஊனமுற்றவர்களுக்கு உதவிகளை செய்வதன் மூலம் சனிபகவான் குளிர்ச்சி அடைவார்.
கோமாதா பூஜை, சனி பிரதோஷ வழிபாடு, சித்தர்களின் பீடங்கள் ஜீவ சமாதியில் வழிபாடு, வன்னி மரத்தை சுற்றி வந்து வழிபடுதல், சிவபெருமானுக்கு வில்வ இலை சாற்றி வழிபடுதல், சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு விரதம் இருந்து காக்கைக்கு உணவளித்தல் ஆகிய இந்த எளிமையான பரிகாரங்களை செய்வதன் மூலம் சனி பகவான் மனம் குளிர்ந்து இன்னல்களை குறைத்து அருளுவார் என்பது ஐதீகம்.