CINEMA
விஜயாவின் மாஸ்டர் பிளானை டம்மி ஆக்கிய மீனா- ஸ்ருதி… சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்…
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை தொடரில் சனிக்கிழமை எபிசோடில் விஜயா மீனாவுக்கும் ஸ்ருதிக்கும் சண்டே மூட்டிவிட்டு இருவரையும் பிரிக்க திட்டமிட்டு சுருதியின் அம்மாவை கூப்பிட்டு இல்லாததையும் கொள்ளாததையும் கூறி ஏத்தி விடுகிறாள். அத்தோடு அன்றைய எபிசோடு முடிந்தது. இனி இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை இனி காண்போம்.
விஜயாவிடம் பேசிவிட்டு சென்ற ஸ்ருதியின் அம்மா நேரா மீனா பூ கட்டும் இடத்திற்கு சென்று மீனாவிடம் சண்டை இடுகிறாள். நீ எதுக்கு என் பொண்ணு வாழ்க்கையில குறுக்க வர உன் கூட சேர்ந்தா என் பொண்ணுக்கு கெட்ட பேர தான் கிடைக்குது. என்ன என் பொண்ணு கூட சேர்ந்துட்டு பணத்தை எல்லாம் புடுங்கலாம்னு பிளான் பண்றீங்களா அப்படின்னு திட்டுகிறாள். உடனே மீனா கோபப்பட்டு நிறுத்துங்க நாங்க அப்படிப்பட்ட ஆளுங்க எல்லாம் கிடையாது நாங்க ஒரு வாயினாலும் உழைச்சிதான் நாங்க சாப்பிட்டுட்டு இருக்கோம் அப்படின்னு சொல்லி திட்டி அனுப்பி விடுகிறாள். இதை தூரத்தில் இருந்து பார்த்த முத்து உடனே வந்து என்ன ஆச்சு இந்த அம்மாவுக்கு எதுக்கு உன்னிடம் எப்படி கத்திட்டு போறாங்க அப்படின்னு கேட்கிறான்.
உடனே மீனா அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க இதெல்லாம் பெரிய பிரச்சனை இல்ல நீங்க ஏன் இந்த நேரத்துல வந்தீங்க இதெல்லாம் அத்தையோட வேலை தான் அத்தை தான் இப்படி எனக்கு சுருதிக்கும் சண்டை மூட்டி விடறதுக்கு இப்படி பண்ணி இருக்காங்கன்னு நினைக்கிறேன் அப்படின்னு சொல்கிறாள். உடனே இத சும்மா விடக்கூடாது வா நம்ம போய் சுருதிகிட்ட கேட்கலாம் அப்படின்னு கூட்டிட்டு வீட்டுக்கு வருகிறான். இதற்கிடையில் விஜயா வீட்டில் இருந்து என்ன நம்ம சுருதி அம்மா கிட்ட ஏத்தி விட்டோம் ஒரு ரியாக்ஷனுமே இல்லையே அப்படின்னு யோசனை பண்ணிட்டு இருக்கா. அந்த நேரத்தில் முத்து வீட்டுக்குள்ள கத்திக்கிட்டே வருகிறான். அப்போ ரவி ஏன்டா இப்படி கத்துற என்னடா ஆச்சுன்னு கேக்கிறான். எங்கடா உன் பொண்டாட்டி அவளுக்கு வேற வேலையே இல்லையா ஏன் என் பொண்டாட்டியை திட்டுவாங்க வச்சிக்கிட்டே இருக்கா அப்படின்னு ரவியை கூட்டிகிட்டு ரூமினுள் போகிறான்.
ரூமில் உள்ளே ரவி முத்து சுதி மீனா நாலு பேரும் அவங்களுக்குள்ளே திட்டிக்கிறாங்க எதுக்காக நீங்க இப்படி பண்றீங்க உங்களுக்கு சப்போர்ட் பண்ணது எங்க குத்தமா அப்படி என்று பேசிக்கிறாங்க. இதை வெளியே கேட்டு இருந்த விஜயா ரசிச்சிட்டு இருக்கிறாள். அப்போ அண்ணாமலை அங்க வந்து என்னாச்சு என்ன சத்தம் கேட்கிறார். அப்பவும் விஜயா இந்த வீட்ல பிரச்சனைனாலே ஒன்னு முத்து இல்லன்னா மீனாவால தான் இருக்கும். அதான் நாலு பேரு சத்தம் போட்டுட்டு இருக்காங்க அப்படின்னு சொல்கிறாள். ஆனால் உள்ளே நடந்தது என்னவென்றால் எல்லாரும் சும்மா விஜயாவை ஏமாத்தறதுக்காக பொய் சண்டைதான் போட்டு இருக்கிறார்கள்.
பின்னர் சண்டை போட்ட மாதிரி நடித்துவிட்டு கீழே வந்த முத்துவின் பின்னாடியே அண்ணாமலை வந்து ஏன்டா இப்படி சண்டை போட்டுக்குறீங்கன்னு என்று கேட்கிறார். அதெல்லாம் இது பெரிய விஷயமே இல்லப்பா அம்மா வந்து எங்கள பிரிக்கணும்னு நினைச்சாங்க அவர்களை ஏமாற்றுவதற்கு தான் நாங்கள் இப்படி சண்டை போட்டோம் அப்படின்னு சொல்கிறான். இதோடு இன்றைய எபிசோடு முடிந்தது .