CINEMA
பெண் கேட்க தயாரான மகேஷ்.. அன்புவிடம் அழகனை பற்றி கேட்கும் ஆனந்தி.. பரபரப்பான திருப்பங்களுடன் சிங்கபெண்ணேவில் இன்று..!!
சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களை பார்க்க மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் சன் டிவியில் சிங்க பெண்ணே சீரியல் ஒளிபரப்பாகிறது. இந்த சீரியலை தனுஷ் கிருஷ்ணா இயக்குகிறார். தினமும் விறுவிறுப்பான கதைக்களத்தோடு சீரியல் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. செவரக்கோட்டையில் நடைபெறும் திருவிழாவிற்காக அன்பு, ஆனந்தி, மகேஷ், மித்ரா உள்ளிட்டோர் வந்தனர். ஊருக்கு வந்ததிலிருந்து ஆனந்திக்கு அடுத்தடுத்த பிரச்சனைகள் வருகிறது.
ஆனந்தி தீ மிதிக்கும் போது சுயம்புலிங்கம் சதி செய்து பேனரை கீழே விழ செய்கிறார். அப்போது அன்புவும், மகேஷும் ஆனந்தியை காப்பாற்றி விட்டனர். அதன் பிறகு தன்னுடைய அண்ணனை பார்க்க செல்லும் ஆனந்தி மீது கோவில் நகைகளை திருடியதாக பழி விழுகிறது. தன் மீது விழுந்த திருட்டுப் பழியை நீக்குவதற்காக திருடர்களை ஆனந்தி பிடிக்க செல்கிறார். அப்போது அவர்கள் ஆனந்தியை தாக்கி மண்ணுக்குள் புதைத்து விடுகின்றனர்.
அப்போதும் மகேஷம் அன்பும் வந்து ஆனந்தியை காப்பாற்றுகின்றனர். அந்த சமயத்தில் மகேஷ் தான் இவ்வளவு நாளாக காதலித்த பெண் ஆனந்தி தான் என்ற உண்மையை அன்புவிடம் போட்டு உடைக்கிறார். இதனை கேட்டதும் அன்பு அதிர்ச்சி அடைந்தார். இதனை தொடர்ந்து ஊர் கூட்டத்தில் வைத்து ஆனந்தி தன் மீது தவறு இல்லை என நிரூபிக்கிறார். மித்ரா மகேஷின் அப்பாவிடம் பேசி அவரது கோபத்தை தூண்டி விடுகிறார். இதனால் மகேஷ் அப்பா தனது மகனை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு திட்டுகிறார்.
இன்று வெளியான ப்ரோமோவில், அனைவரும் ஊருக்கு வந்து விடுகின்றனர். அப்போது ஹாஸ்டல் வார்டன் ஊருக்கு போய்விட்டு வந்ததில் இருந்தே சரியாக இல்லை என வாட்ச்மேன் கூறுகிறார். இதற்கிடையே ஆனந்தி அன்புவிடம் அழகன் யாருன்னு உங்களுக்கு தெரியும்னு சொன்னீங்களே? அந்த அழகன் யார்? என கேட்கிறார். உடனே அன்புவின் முகம் மாறி விடுகிறது. தான் தான் அழகன் என்று அன்பு உண்மையை கூறுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.