ஆரம்ப காலகட்டத்தில் இருந்து தற்போது வரை சினிமாவில் ஹீரோயின்கள் நடிப்பதற்காக பல கோடி சம்பளத்தை வாங்குகிறார்கள். ஆனால் தற்போது ஒரு படத்தில் மட்டும் கமிட் ஆகாமல் ஒரே சமயத்தில் பல படங்களில் கமிட் ஆகி பலகோடி வரை சம்பாதிக்கிறார்கள். இதைத் தொடர்ந்து பல சீரியல் நடிகைகளும் சினிமா கதாநாயகியாக உருவெடுத்து தன் சம்பளத்தை உயர்த்தி கொள்கிறார்கள். இருப்பினும் சினிமாவை தாண்டி சீரியலில் பல லட்சங்களை பெறும் பல கதாநாயகிகள் உள்ளார்கள். அந்த வரிசையில் டாப் 5 சீரியலில் மிகப் பிரபல கதாநாயகிகள் வாங்கும் சம்பளத்தை தான் தற்போது பார்க்க உள்ளோம் ;
கடந்தாண்டு சன் டிவியில் தொடங்கப்பட்டு தற்போது மிக பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான் சிங்க பெண்ணே. இந்த சீரியலில் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர்தான் மனிஷா மகேஷ். இவர் ஒரு எபிசோடுக்கு 15 ஆயிரம் அளவு சம்பளம் வாங்குகிறாராம்.
விஜய் டிவியில் மிக பிரபலமாக மக்கள் மனதை கொள்ளை கொள்ளும் அளவிற்கு ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர்நீச்சல். இந்தத் தொடரில் நான்கு மருமகள் உள்ள நிலையில் அதில் கடைக்குட்டி சிங்க பெண்ணாக நடிக்கும் மமிதா ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் கிட்டத்தட்ட ஒரு எபிசோடுக்கு 18 ஆயிரம் அளவு சம்பளம் வாங்குகிறாராம்.
விஜய் டிவி மூலம் தன் கரியரை ஆரம்பித்தாலும் தற்போது சன் டிவியில் இனியா என்ற சீரியலில் நடித்து பிரபலமானவர்தான் ஆலியா மானசா. இந்த சீரியலில் ஒரு எபிசோடுக்கு இவருக்கு கிட்டத்தட்ட 20000 ரூபாய் அளவு சம்பளம் கொடுக்கப்பட்டு வருகிறதாம்.
ஜீ தமிழில் மிகப் பிரபலமாக ஓடிய சீரியல் தான் யாரடி நீ மோகினி. இந்த சீரியல் மூலம் பிரபலமாகி தற்போது சன் டிவியில் கயல் என்ற தொடரில் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் சைத்ரா ரெட்டி. இவர் ஒரு எபிசோடுக்கு மட்டும் கிட்டத்தட்ட 25 ஆயிரம் ரூபாய் வரையும் சம்பளம் பெறுகிறார்.
சன் டிவியில் சுந்தரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து தற்போது அந்த கதாபாத்திரத்துக்கே அடையாளமாக மாறி இருப்பது தான் கேபிர்ல்லா. தற்போது முதல் பாகம் நன்றாக ஓடி இரண்டாவது பாகமும் மக்கள் மனதை கொள்ளை கொண்டு இருக்கிறது. இந்த தொடரில் கேப்ரல்லா நடிப்பதற்காக ஒரு எபிசோடு மட்டும் 40 ஆயிரம் அளவு சம்பளம் வாங்கி முதல் இடத்தை பிடித்துள்ளார்.