நடிப்புனு வந்துட்டா நான் சூரப்புலிடா.. பரதேசி அங்கமாவுக்கே tough கொடுக்கும் வேதிகா.. வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ..

By Ranjith Kumar

Updated on:

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளில் முன்னணி நாயகியாக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் வேதிகா. இவர் 2006 ஆம் ஆண்டு மதராசி என்ற தமிழ் படம் மூலம் திரையுள்ளதற்கு முதல் முதலாக அறிமுகமாகி, அதன் பின்னதாக தன் நடிப்பு திறமையால் பலரையும் தன் பின்னால் கட்டிப் போட்டு வைத்திருந்தார்.

அதற்கடுத்ததாக முதல் முதலாக இவருக்கு அங்கீகாரம் கிடைத்த படம் தான் முனி 2006 ஆம் ஆண்டு லாரன்ஸ் அவர்களுடன் இணைந்து நடித்த முனி. இப்படம் மூலம் தமிழ் திரையுலகில் மிகப் பிரபல நடிகையாக வளம் வந்து கொண்டிருந்தார். அதன் பின்னதாக தான் இவருக்கு பல மொழிகளில் வாய்ப்பு கிடைக்க ஆரம்பித்தது. நீண்ட வருடம் கழித்து தன் முழு திறமையால் நடித்திருந்த படம் தான், 2013 ஆம் ஆண்டு பாலாவின் இயக்கத்தில் அதர்வா நடிப்பில் வெளிவந்த பரதேசி. இப்படத்தில் அதர்வாக்கு ஜோடியாக நடித்த இவர், திரை உலகில் மாபெரும் ஜாம்பவான் என்று நிரூபித்தர்.

   

இவரின் மிகச் சிறந்த நடிப்பின் சித்தரிப்பிற்காக பல விமர்சனங்களையும் பல அவார்டுகளையும் இப்படம் மூலம் வென்றார். அதற்கு அடுத்ததாக இவர் பல படங்கள் வரிசையாக நடிக்க ஆரம்பித்தார், அந்த வரிசையில் காவியத்தலைவன், காஞ்சனா 3, வெல்கம் டு சென்ட்ரல் ஜெயில், காளை போன்ற முன்னணி ஹீரோவுகளுடன் இணைந்து மிகப்பெரிய வெற்றி படங்களை கொடுக்க ஆரம்பித்தார். தற்போது இவர் பாபி சிம்கா அவர்களுடன் இணைந்து படம் நடித்துக் கொண்டிருக்கிறார்.

தெலுங்கில் epical வரலாறு படமாக, யாட்டா சத்யநாராயணன் இயக்கத்தில் பாபி சிம்காவுடன் இணைந்து நடித்துக் கொண்டிருக்கிறார் வேதிகா, படப்பிடிப்பு தளத்தில் நடக்கும் சுவாரசியமான விஷயங்களையும், படத்திற்காக போடப்படும் கெட்டப்கள் மற்றும் சூட்டிங் ஸ்பாட் இல் இவர் நடத்தும் காமெடி கலாட்டாக்களை வீடியோ எடுத்து தற்போது இணையத்தில் பகிர்ந்து உள்ளார். இதை கண்ட ரசிகர்கள் தற்போது அந்த வைரல் ஆக்கி வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Vedhika (@vedhika4u)

author avatar
Ranjith Kumar