விஜய் தொலைக்காட்சியின் சூப்பர்ஹிட் ரியாலிட்டி ஷோக்க்களில் ஒன்று குக் வித் கோமாளி. கொரோனா லாக்டவுன் சமயத்தில் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியானது ரசிகர்களின் பேராதரவை பெற்று மூன்று சீசன்களை கடந்தது. தற்பொழுது 4வது சீசன் ஜனவரி மாதம் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக இறுதி கட்டத்தையும் எட்டியுள்ளது.

இந்த சீசனில் மூன்று சீசன்களிலும் கோமாளியாக கலக்கிய சிவாங்கி குக்காக களமிறங்கி கலக்கி வருகிறார். ஒரு சமையல் நிகழ்ச்சியை இவ்வளவு காமெடியாக கொடுக்க முடியும் என்பதை குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இந்த சீசனும் நிரூபித்துள்ளது. தற்பொழுது ரசிகர்களின் பேராதரவை பெற்று குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி ஆனது இறுதி நிகழ்ச்சியில் மாபெரும் சர்ப்ரைஸ் நடந்துள்ளது.
கோமாளியாக இருந்து குக் ஆக 4 சீசன் களமிறங்கிய சிவாங்கி தான் டைட்டிலை வின் செய்வார் என்று நினைத்தார்கள், ஆனால் மைன் கோபி அவர்கள் டைட்டில் வின்னிகை தன் வசம் இழுத்துக் கொண்டார். தற்போது இவ்வளவு விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த குக் வித் கோமாளியின் சீசன் 5 எப்பொழுது என்று எதிர்பார்த்த பல ரசிகர்களுக்கு தற்போது ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. அதாவது தொகுப்பாளராக இருந்த வெங்கடேஷ் பட் அவர்கள் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறுகிறேன் என்று தற்போது தெரிவித்திருந்தார், இந்த நிகழ்ச்சியில் பெரும் ஆதரவைப் பெற்ற அவர் நிகழ்ச்சியை விட்டு செல்வதால் பலரும் ஏக்கத்தில் இருந்தார்கள்.
ஆனால் இவருக்கு பதிலாக நடிகரும் செஃப் ஆன மதக்கம்பட்டி ரங்கராஜன் அவர்கள் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. ஆனால் சில நாட்களுக்கு முன்னால் வெங்கடேஷ் பட் ஒரு வீடியோ ஒன்று வெளியிட்டு இருந்தார். அதில் தான் மட்டும் வெளியேறவில்லை என்னை தொடர்ந்து அவரது பார்ட்னரான செஃப் தாமு அவரும் வெளியேறப் போகிறார் என்று தெரிவித்திருந்தார். ஆனால் அந்த வீடியோவை டெலிட் செய்து விட்டு பின்னர் இணைய பக்கத்தில் பதிவு ஒன்று போட்டிருந்தார், என் நண்பன் என்னை போல தான், நான் எங்கு சென்றாலும் வருவான் என்று மறைமுகமாக அவர் வெளியேறுவதை வெளிப்படுத்தி இருந்தார்.
இந்த நிகழ்ச்சியில் வரிசையாக தொகுப்பாளர் இயக்குனர் என்று தற்போது செஃப் வரையும் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் இவர்கள் எல்லாரும் வெளியேறுகிறார்களா? அல்லது இந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோஷன் செய்வதற்கு பல பொய்யான தகவல்களை வெளியிடுகிறார்களா? என்று தெரியவில்லை, இன்னும் சில நாட்களில் சீசன் 5 காண ப்ரமோஷன் வீடியோ வெளியாகும், அப்பொழுதுதான் இந்த நிகழ்ச்சியில் யார் யார் இருக்கிறார்கள் என்று தெரியவரும். அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை, எந்த செய்தியும் தற்போது வரை நம்ப முடியாத விஷயமாக உள்ளது.
