சிவகார்த்திகேயன் இயக்குனருடன் கூட்டணி சேரும் தனுஷ்.. சிஷியனுக்கு கெடச்சது குருவுக்கு கெடைக்கும்..?

By Ranjith Kumar

Updated on:

Sk 21 படமான “அமரன்” படத்தை ராஜ்குமார் பெரியசாமி அவர்கள் இயக்கி கொண்டு இருக்கிறார். இப்படத்தை ராஜ் கமல் ஃபிலிம் கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கிறது. மறைந்த முன்னாள் மேஜர் முகுந்தன் அவர்களின் வாழ்க்கை சரிதத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு தற்போது முடிவடைந்துள்ள.

படம் வெளியாவதற்குள் மாபெரும் எதிர்பார்ப்பையே கிளப்பியுள்ளது. இப்படம் ஏப்ரல் மாதத்திற்கு பின் திரைக்கு வரும் என்று கமல் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளார்கள். தற்போது ராஜ்குமார் பெரியசாமி Sk படத்தை முடித்த பின், பிரபல நடிகரான தனுஷ் அவர்களை வைத்து இயக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. தனுஷ் அவரை எழுதி இயக்கும் D50 ராயன் படம் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

   

இப்படத்தில் மிகப்பிரமாண்ட நடிகரான எஸ் ஜே சூர்யா, செல்வராகவன், அபர்ணா பாலமுருகன் போன்றோர் நடித்து கொண்டிருக்கிறார்கள். தற்போது மாபெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள இப்படம், திரைக்கு எப்பொழுது வரும் என்று திரையரங்கு வாசலிலேயே காத்து கொண்டிருக்கிறது ரசிகர் கூட்டம். அந்த அளவுக்கு இப்படத்தின் எதிர்பார்ப்பு மிகப் பிரம்மாண்டமாக உள்ளது. தற்போதைய இப்படத்தை முடித்தபின், தனுஷ் அதற்கு அடுத்ததாக Neek என்ற படத்தில் நடிக்க உள்ளதாக தெரியவந்துள்ளது.

அதற்கு அடுத்ததாக மிகப் பிரபலமான தெலுங்கு இயக்குனர் ஒருவர் தனுஷை வைத்து D51 படமான குபேரா படத்தை இயக்க உள்ளதா தெரிவித்து இருந்தார்கள். படத்தை முடித்த பின் D52 வை சிவகார்த்திகேயனை வைத்து பிரம்மாண்டமாக இயக்கி கொண்டிருக்கும் அமரன் பட இயக்குனரான ‘ராஜ்குமார் பெரியசாமி’ தனுஷை வைத்த இயக்கப் போவதாக தகவல் கசிந்துள்ளது. இது புதுவிதமான கூட்டணியாக இருப்பதால், ரசிகர்கள் ஆரவாரம் தெரிவித்து வருகிறார்கள்.

மதுரை அன்பு தயாரிப்பு நிறுவனமான கோபுரம் என்டர்டைன்மென்ட் பிலிம் இப்படத்தை தயாரிக்க உள்ளதாம். இரண்டு பிரம்மாண்டம் சேர்ந்து இயக்கப் போகும் இப்படம் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு திரையுலகமே தெறிக்கும் அளவிற்கு படம் உருவாக்கப்படும் என்று தெரிய வருகிறது.

author avatar
Ranjith Kumar