#image_title
தற்போது தென்னிந்திய சினிமாவில் மிக முக்கியமான ஒரு நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை சாய் பல்லவி. இவர் தற்போது அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகிக்கொண்டே வருகின்றார் என்று சொல்லலாம். இவர் மலையாளத்தில் அதிகம் ஆர்வம் காட்டினாலும் தமிழ் சினிமாவிலும் அதிகமாக ஆர்வம் காட்டி வருகிறார். இவர் பிரேமம் படத்தில் மலர் டீச்சராக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். அந்த படம் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது.
#image_title
இந்த படத்தின் மூலம் இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை பெற்றார். தமிழில் சூர்யா, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.மாரி 2, என் ஜி கே, கார்கி போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் கமலஹாசனின் ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் அமரன் படத்தில் சாய் பல்லவி நடித்து வருகிறார்.
#image_title
மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறு தான் இந்த திரைப்படம். இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. இதற்கான புரொமோஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது.
#image_title
படத்தில் முகுந்த் வரதராஜனின் மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸ் கேரக்டரில் தான் நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார். இந்நிலையில் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக அவர் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.அதாவது 3 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.
தென்மேற்குப் பருவமழை அடுத்த 24 மணி நேரத்தில் தொடங்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளதால் தமிழகத்தில்…
தமிழக அரசியலில் கூட்டணி மாற்றங்கள், கட்சிகள் இடையேயான விமர்சனங்கள் மற்றும் மக்கள் நலத் திட்டங்களை மையமாகக் கொண்ட விவாதங்கள் தீவிரமடைந்து…
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'கருப்பு' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படத்தின்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்து, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு…
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில், தகுதியுள்ள மகளிருக்கான மாதாந்திர உரிமைத் தொகையை தவெக கட்சியின் தேர்தல் வாக்குறுதியின்படி ₹2,500 ஆக…
திருவொற்றியூர் தேரடி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் 24 மணி நேரமும் கள்ளச்சந்தையில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்பட்டு வந்த…