தமிழ் சினிமாவில் இருந்து இசை கொஞ்சம் கொஞ்சமாக பிரிந்து தனித்தியங்க ஆரம்பித்துள்ளது. தற்போது தனியிசை ஆல்பங்கள் அதிகளவில் வெளியாகி அதன் கலைஞர்கள் அதிக கவனம் பெற்று வருகின்றனர். அந்த வகையில் சமீபகாலமாக மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளார் இளம் இசைக் கலைஞரான சாய் அப்யங்கர்.
அவர் உருவாக்கிய கட்சி சேர மற்றும் ஆசைக் கூட ஆகிய பாடல்கள் மில்லியன் கணக்கில் வியூஸ்களைப் பெற்று இளைஞர்கள் மத்தியில் சென்சேஷன் ஹிட்டாகியுள்ளன. இதையடுத்து அவர் லோகேஷ் கனகராஜ் கதை மற்றும் தயாரிப்பில் உருவாகும் பென்ஸ் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.
அடுத்து சமீபத்தில் சூர்யா 45 படத்துக்கும் அவர் இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆகியுள்ளார். அடுத்தடுத்து இரண்டு பெரிய படங்களில் இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆகியுள்ள அவர் பற்றி ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது.

இவர் தமிழ் சினிமாவின் முன்னணி பாடகர்களான திப்பு மற்றும் ஹரிணி ஆகியோரின் மகன் என்பது பலரும் அறியாதது. அவர்கள் இருவரும் பாடகர்கள் என்பதால் சிறு வயது முதலே அப்யங்கருக்கு இசை சொல்லிக்கொடுத்து மிக இளம் வயதிலேயே இசையமைப்பாளர் ஆகும் அளவுக்கு உருவாக்கியுள்ளார்.
