தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்க பாலிவுட்டில் இருந்து ஆள் இறக்குமதி செய்யும் சூர்யா… யார் அந்த நபர்?

By vinoth on மார்கழி 10, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் நம்பிக்கைக்குரிய நடிகராக வளர்ந்து வந்தார் சூர்யா. 2000 களில் உத்வேகம் பெற்ற அவரின் வளர்ச்சி 2010 களில் உச்சம் தொட்டது. ஆனால் ஒரு கட்டத்தில் அதில் ஒரு தேக்க நிலை ஏற்பட்டது.  அதன் பின்னர் அவரால் கடந்த 10 ஆண்டுகளாக ஒரு மிகப்பெரிய வெற்றி படத்தைக் கொடுக்க முடியவில்லை.

இடையில் சூரரைப் போற்று மற்றும் ஜெய் பீம் ஆகிய வெற்றி படங்கள் அமைந்தாலும் அவை ஓடிடியில் ரிலீஸாகின என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவுக்குள் எதிர்பாராத விபத்தாகவே சூர்யாவின் வருகை இருந்தது. கல்லூரிப் படிப்பை முடித்த அவர் கார்மெண்ட்ஸ் தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது நேருக்கு நேர் படத்தில் இருந்து அஜித் விலகவே, அவருக்கு பதில் சூர்யா உள்ளே வந்தார்.

   

அதன் பொன்னர் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்திலும் இருவரும் இணைந்து பணியாற்றினார்கள். முதலில் நடிப்பு, நடனம் எல்லாவற்றிலும் சூர்யா சுமார்தான். ஆனால் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டு தன்னை மெருகேற்றிக் கொண்டு இப்போது தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவராக இருக்கிறார். ரஜினி, கமல், விஜய் மற்றும் அஜித்துக்கு அடுத்த இடத்தில் சூர்யா இருக்கிறார்.

   

 

ஆனால் சூர்யா என்றுமே விஜய், அஜித் போல மாஸ் ஹீரோவாக உருவானதில்லை. அவர் நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்தபோதெல்லாம் அவை சூப்பர் ஹிட்டாக்கின. ஆனால் சூர்யா, தன்னை விஜய் அஜித் போல ஒரு மாஸ் ஹீரோ என நினைத்துக்கொண்டதுதான் அவருக்கு பின்னடைவாக அமைந்தது.

அதற்கு வெகுசமீபத்தைய உதாரணம்தான் கங்குவா. இந்த தோல்வியில் இருந்து சூர்யா பாடம் கற்று அடுத்து நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இப்போது தனக்காக கதைக் கேட்டு அவருக்கான திரைக்கதைகளை இனிமேல் முடிவு செய்ய உள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த நபர் இதற்கு முன்னர் சல்மான் கானுக்காக கதைக் கேட்கும் பணிகளில் ஈடுபட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.