முதல்முறையாக வெள்ள நீரில் தத்தளிக்கும் சஹாரா பாலைவனம்… இயற்கை மாற்றத்தால் அழிவு ஏற்படுமா…?

By admin on ஐப்பசி 13, 2024

Spread the love

உலகிலேயே மிக நீளமான பாலைவனம் சஹாரா பாலைவனம். ஆபிரிக்க கண்டத்தின் மொரோக்கோவில் தென்கிழக்கு பகுதியில் அமைந்திருக்கிறது. இது உலகிலேயே மிகவும் வறண்ட அதிக வெப்பம் கொண்ட பாலைவனமாக அறியப்படுகிறது.

   

கடைகாலத்தில் அதிக வெப்பமாக 116 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். பகலில் எவ்வளவு வெப்பமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு இரவில் பணி உறையும் மைனஸ் டிகிரிக்கு சென்று விடும். மனிதர்கள் வாழ தகுதி இல்லாத இடமாக தான் சஹாரா பாலைவனம் இருக்கிறது. ஆனால் மிக விஷமுள்ள கொடிய உயிரினங்கள் வாழுமிடமாகவும் சஹாரா பாலைவனம் இருக்கிறது.

   

மொரோக்கோ நாட்டின் தென் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள இந்த சஹாரா பாலைவனத்திற்கு தான் சுற்றுலா பயணிகள் வந்து செல்வர். அதிக வெப்பநிலை கொண்ட சஹாரா பாலைவனத்தில் மழை பெய்வது மிகவும் அரிது. ஒரு நல்ல மழை பெய்வதற்கே வருடங்கள் காத்திருக்க வேண்டி இருக்கும். ஆனால் இந்த வருடம் சஹாரா பாலைவனத்தில் பெய்த மழையால் வெள்ளம் ஏற்பட்டு இருக்கிறது.

 

கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரு வருடத்திற்கான மழை இரண்டே நாட்களில் கொட்டி தீர்த்ததால் சஹாரா பாலைவனம் முழுவதும் நீர் வெள்ளம் போல் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த சஹாரா பாலைவனத்தில் இருக்கும் இர்க்கி என்ற ஏரி எப்போதும் வறண்டு காணப்படும். தற்போது அது முழுவதும் நீர் நிரம்பி இருக்கிறது. இந்த சஹாரா பாலைவனத்தில் நீர் ஓடும் காட்சியை நாசா படம்பிடித்து வெளியிட்டு இருக்கிறது.

ஒரே நாளில் சஹாரா பாலைவனத்தில் 100 மில்லி மீட்டர் அளவுக்கு கனமழை பதிவாகி இருக்கிறது. வெப்பமண்டல சூறாவளியால் இந்த மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது என்று வானிலை ஆய்வாளர்கள் கூறியிருக்கின்றனர். ஆனால் வழக்கத்திற்கு மாறாக இதுபோன்று நடக்கும் சம்பவங்களால் இயற்கையில் மாற்றம் ஏற்படுவதை கருத்தில் கொண்டு இது அழிவுக்கு காரணமாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.