கடந்த 1937-ஆம் ஆண்டு ரத்தன் டாட்டா பிறந்தார். இவர் கார்னல் கட்டிடக்கலை பல்கலைக்கழகத்தில் கட்டிடக்கலை இளங்கலை பட்டம் பெற்றார். அதன் பிறகு கடந்த 1961 ஆம் ஆண்டு டாடா ஸ்டீல் கம்பெனியில் தனது பணியை தொடங்கி 1991 ஆம் ஆண்டு டாடா குடும்பத்தின் தலைவராக பொறுப்பேற்றார். பிற தொழிலதிபர்களை போல் சொத்துக்களை சேர்ப்பது, சாம்ராஜ்யத்தை உருவாக்குவது என ஆடம்பரமாக வாழ ரத்தன் டாட்டா விரும்பவில்லை. இவரது தலைமையில் டாட்டா குழுமம் உலகம் முழுவதும் பிரபலமானது.

தனது வருமானத்தில் 60 முதல் 65 சதவீத பங்கை ரத்தன் டாட்டா தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளார். இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்ம விபூஷன் விருது ரத்தன் டாட்டாவுக்கு 2008-ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. சுமார் 30 ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் ரத்தன் டாடா முதலீடு செய்துள்ளார். டாட்டா நிறுவனம் பைனான்சியல், மெட்டல், ஆட்டோ மோட்டிவ் கன்சியூமர், ரீடைல் செக்டர், டிராவல், டெலிகாம், ஐடி என அனைத்திலும் வெற்றி கண்டது. இப்படி வெற்றிகண்ட இவர் சமீபத்தில் உடல்நல குறைவால் இந்த மண்ணுலகை விட்டு மறைந்தார். இவருடைய மரணம் ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்நிலையில் மறைந்த ரத்தன் டாடா குணம் பற்றி பேசியுள்ள Business line editor Raghuvir srinivasan, ரத்தன் டாடா நாய்கள் மீது அவ்வளவு பாசம் கொண்டவர். டாடா தலைமை நிறுவனத்தில் கூட தெருவில் போகும் நாய்களுக்கு எல்லாம் அவர் அடைக்கலம் கொடுத்துள்ளார். அங்கேயே ஒரு ஏசி ரூம் கட்டியுள்ளார். அந்த ரூமில் நாய்களுக்கு படுக்கை மற்றும் ஷவர் என அனைத்துமே உள்ளது. எப்போதுமே அங்கு ஒரு பத்து நாய்கள் இருக்கும். வீட்லயும் நிறைய நாய்கள் வைத்திருந்தார். ஒரு பெரிய நாய் ஒன்றையும் அவர் வைத்திருந்தார். அது இறந்த சமயத்தில் அவர் மிகவும் வருத்தப்பட்டார். அந்த சமயத்தில் அவர் ரொம்ப பாதிக்கப்பட்டார் என்று அவர் கூறியுள்ளார்.
