சிவா மனசுல சக்தி படத்துல அந்த காமெடி சீனை சந்தானம் தான் யோசிச்சாரு.. பயங்கர அல்டிமேட்.. மனம் திறந்த இயக்குனர் ராஜேஷ்..!

By Nanthini on ஐப்பசி 14, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர்தான் ராஜேஷ். இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக இருந்த இவர் பல வருடங்கள் அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். முதன்முதலாக சிவா மனசுல சக்தி என்ற திரைப்படம் மூலம் தான் இயக்குனராக அறிமுகமானார். ஜீவா, அனுயா, சந்தானம் உள்ளிட்டோ நடிப்பில் 2009 ஆம் ஆண்டு வெளியான இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். ஜீவாவின் கேரியரில் மிக மிக முக்கிய படமாக இந்த திரைப்படம் அமைந்தது. பக்கா கமர்சியல் என்டர்டைனர் படமாக உருவாகியிருந்த இந்த திரைப்படத்தில் சந்தானத்தின் காமெடி மற்றும் ஜீவாவின் நடிப்பு என அனைத்துமே பக்காவாக பொருந்தியது. குறிப்பாக அதில் ஜீவா பேசிய பல வசனங்கள் இன்று வரை பலரது பேவரைட்.

   

குறிப்பாக இப்படத்தில் நடித்ததன் மூலம் தான் ஜீவா இளைஞர்கள் மத்தியில் அதிகம் கனெக்ட் ஆனார். இந்த திரைப்படம் எதிர்பார்த்ததைவிட நல்ல வெற்றி பெற்றது. அடுத்ததாக பாஸ் என்கிற பாஸ்கரன் திரைப்படத்தையும் ராஜேஷ் இயக்கியிருந்த நிலையில் கோலிவுட்டின் முன்னணி இயக்குனர் பெயரை அடைந்தார். இதனை தொடர்ந்து ஜெயம் ரவியை வைத்து பிரதர் திரைப்படத்தை இவர் இயக்கி முடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் சிவா மனசுல சக்தி படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

   

 

இந்த நிலையில் ராஜேஷ் சமீபத்தில் அளித்த பேட்டியில், சிவா மனசுல சக்தி திரைப்படத்தில் சந்தானத்தின் காமெடி பயங்கரமாக இருந்தது. அதுலயும் ஜீவா மழையில நனைஞ்சுட்டு சட்டையை கழட்டி போட்டுட்டு உட்கார்ந்திருக்கிற சீனு அல்டிமேட். அடுத்ததாக இரவில் தூக்கத்தை கெடுக்கும் போது சந்தானம் பெட்ஷீட் போர்த்திக் கொண்டு வாங்க என்று கூறி இருந்தோம். ஆனால் டேக் என்று சொன்னதும் யாருமே எதிர்பார்க்காத மாதிரி சந்தானம் அவராகவே பாயை போர்த்திக் கொண்டு வந்து நின்றார். இந்த படத்துல பல காமெடி சீன் சந்தானம் யோசிச்சது நல்லா வொர்க் அவுட் ஆச்சு என்று ராஜேஷ் பேசியுள்ளார்.