பிரகாஷ் ராஜ் தென்னிந்தியாவில் பணியாற்றும் நடிகர், திரைப்பட இயக்குனர், திரைப்பட தயாரிப்பாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார். இவர் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். ஆரம்பத்தில் மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரகாஷ்ராஜ் பின்னர் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

கே பாலச்சந்தர் இயக்கிய டூயட் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பாக்கியராஜ் தொடர்ந்து வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார். இது மக்களிடம் இருந்து நல்ல வரவேற்பு பெறவே தொடர்ந்து வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானார் பிரகாஷ்ராஜ். 1990 களின் இறுதியிலும் 2000 காலகட்டத்தில் புகழின் உச்சியில் இருந்தார் பிரகாஷ்ராஜ்.
2000களின் நடுப்பகுதியில் குணச்சித்திர வேடங்களில் நல்ல கதாபாத்திரம் உள்ள திரைப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார் பிரகாஷ்ராஜ். இவர் நடித்ததில் தோனி, அபியும் நானும், சந்தோஷ் சுப்பிரமணியம், வேங்கை, சிங்கம், சகுனி போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்து பேரும் புகழும் அடைந்தவர் பிரகாஷ்ராஜ். அவ்வப்போது அரசியல்வாதிகளுக்கு எதிராக பதிவு போடுவதன் மூலமாகவும் பிரபலமாக இருக்கிறார்.

தற்போது நடிகர் பிரகாஷ்ராஜ் அவர்களுக்கு ஐக்கிய அரபு நாடாடுகளான UAE அரசாங்கம் இவருக்கு கோல்டன் விசா வழங்கி கௌரவித்திருக்கிறது. இதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட பிரகாஷ்ராஜ் UAE அரசாங்கத்துக்கு நன்றி தெரிவித்து இருக்கிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
