பிரபல நடிகரான முரளி தேவயானி நடிப்பில் கடந்த 1996-ஆம் ஆண்டு பூமணி திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த திரைப்படத்தை களஞ்சியம் எழுதி இயக்கியுள்ளார். இந்த நிலையில் இயக்குனர் களஞ்சியம் அளித்த பேட்டியில் கூறியதாவது, படத்துல வேலை செய்யற எல்லாருமே புது முகங்கள் தான்.
கேமராமேன், போட்டோகிராபர் எல்லாருமே புது பையங்க தான். அந்த நேரம் தேவயானி இந்த பக்கம் பாருங்க அப்படின்னு ஒருத்தன் சொல்லிட்டான். தேவயானிக்கு ரொம்ப கோவம் வந்துருச்சு. நீ எப்படி என்ன பெயர் சொல்லி கூப்பிடலாம்? மேடம் என்று தான் கூப்பிடனும் அப்படின்னு ரொம்ப கோவப்பட்டாங்க. தேவயானிக்கு அப்போ தமிழ் தெரியாது.
அவங்க கிட்ட பேசணும்னா ஹிந்தியில் மட்டும் தான் பேசணும். அந்த பையன் கிட்ட மன்னிப்பு கேளுன்னு சொல்றாங்க. அசிஸ்டன்ட் யாருமே போய் அவங்க கிட்ட பேச முடியாது. ஒரு சீன் சொல்லனும்னாலும் நான்தான் போய் அவங்க கிட்ட பேசணும். இந்த ஒரு சூழ்நிலையில அவன் பிரச்சனையை இழுத்து விட்டுட்டான்.

#image_title
என்கிட்ட மன்னிப்பே கேட்டு ஆகணும்னு தேவயானி நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க. யூனிட்ல இருக்க எல்லாருமே தேவயானின்னு சொன்னதுல என்ன தப்பு இருக்கு. நாங்க மன்னிப்பு கேட்க மாட்டோம்னு சொல்லிட்டாங்க. அந்த அம்மா மன்னிப்பு கேட்கலைன்னா நடிக்க மாட்டேன்னு போய் உட்கார்ந்துட்டாங்க. முரளி சார் வந்த உடனே நான் சொன்னேன். முரளி போய் பேசி சமாதானப்படுத்தி கூட்டிட்டு வந்தாங்க என கூறியுள்ளார்.