தமிழ் சினிமாவில் இன்றிருக்கும் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் விஜய். தன்னுடைய புகழின் உச்சியில் இருக்கும் விஜய் ரஜினிகாந்தை விட அதிக சம்பளம் வாங்கும் தமிழ் நடிகர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். அதற்கேற்றார் போல அவரின் சுமாரான படங்கள் கூட நல்ல வசூலைப் பெற்று வருகின்றன.
தற்போது மாஸ் நடிகராக இருக்கும் விஜய், 90 களில் தனக்கான இடத்துக்காக போராடிக் கொண்டிருந்தார். இடையிடையே ஹிட் கொடுத்திருந்தாலும் அவருக்கென்று ஒரு நிலையான மார்க்கெட் கில்லி படத்துக்கு முன்பே உருவானது. அதனால் அதற்கு முந்தைய படங்களில் எல்லாம் தன்னுடைய படத்தில் துறைசார்ந்த பிரபலங்கள் இருக்க வேண்டும், அது படத்தின் பிஸ்னஸுக்கு உதவும் என விரும்புவார்.

#image_title
இப்படி விஜய்யை ஒரு விடலைப் பையனாகவும், சாக்லேட் பாய் ஹீரோவாகவும் அடுத்தடுத்த கட்டத்துக்கு நகர்த்தியவர் அவருடைய தந்தை SAC தான் என்று சொன்னால் அது மிகையாகாது. ஏனென்றால் விஜய்யை அறிமுகப்படுத்தி தொடர்ந்து சில படங்கள் அவரை ஹீரோவாக்கி தயாரித்து நஷ்டமடைந்தார். அதுமட்டுமில்லாமல் விஜய் ஹீரோவானதும் தன்னுடைய கேரியரை விட்டுவிட்டு அவரை முன்னணி ஹீரோவாக்க வேண்டும் என தொடர்ந்து உழைத்தார்.
விஜய்க்கு கதைகள் கேட்பது, அண்டை மாநிலங்களில் ஹிட் ஆகும் படங்களில் எது விஜய்க்கு பொருத்தமாக இருக்கும் எனப் பார்த்து அதன் ரீமேக்குகளில் விஜய்யைக் கொண்டுவருவது என தொடர்ந்து இயங்கினார். இப்படி விஜய்க்கு பில்லராக எஸ் ஏ சி இருந்தது துப்பாக்கி படம் வரைதான். அதன்பின்னர் விஜய்க்கும் எஸ் ஏ சிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அதன் பின்னர் தன்னுடைய கேரியரை தானே முடிவு செய்ய ஆரம்பித்தார்.
அதன் பிறகு விஜய், தன்னுடைய கதைகள் சம்மந்தமாக எந்த முடிவையும் எஸ் ஏ சியை எடுக்க விடவில்லை. ஆனால் அதே நேரத்தில் விஜய்யின் மார்க்கெட் ராக்கெட் வேகத்தில் செல்ல ஆரம்பித்தது. தொடர்ந்து தெறி, மெர்சல், கத்தி, பிகில், மாஸ்டர் என சூப்பர் ஹிட்ஸ்களைக் கொடுத்து நம்பர் ஒன் நடிகரானார். ஆனாலும் விஜய்யின் வளர்ச்சியில் எஸ் ஏ சியை முழுமையாக நீக்கிவிடமுடியாது.
