மலையாள நடிகையான திவ்யா ஸ்ரீதர் தனது 18 வயதில் கண்டெக்டர் என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்த இவர் முதல் திருமணத்திற்கு பிறகு நடிப்பதிலிருந்து விலகினார். இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ள நிலையில் 2019 ஆம் ஆண்டு முதல் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார். பின்னர் சின்னத்திரையில் பிஸியான நடிகையாக மாறிய இவர் மலையாளத்தில் பல சீரியல்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் தன்னுடன் பத்தரமாட்டு என்ற தொடரில் இணைந்து நடித்த கிரிஷ் வேணுகோபாலை புதன்கிழமை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுடைய திருமணம் குருவாயூர் கோவிலில் ரகசியமாக நடந்து முடிந்துள்ளது. இவர்களின் திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மற்றும் கலந்து கொண்டனர். இருவரும் சீரியலில் ஒன்றாக இணைந்து நடித்த பிறகு காதலிக்க தொடங்கிய நிலையில் தற்போது எந்த மீடியாவிற்கும் தெரியாமல் திருமணத்தை முடித்துவிட்டு இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

நடிகர் கிரிஷ் வேணுகோபால் நடிகராக மட்டுமல்லாமல் பேச்சாளராகவும், இயக்குனர் மற்றும் எழுத்தாளர் என பன்முக திறமை கொண்ட கலைஞராக உள்ளார். தற்போது 50 வயதாகும் இவர் இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் முரட்டு சிங்கிளாக இருந்து வந்த நிலையில் தற்போது திவ்யா ஸ்ரீதர் திருமணம் செய்து கொண்டுள்ளார். தன்னைவிட 10 வயது குறைவான மற்றும் விவாகரத்து பெற்ற நடிகையை இவர் திருமணம் செய்துள்ளது தற்போது சோசியல் மீடியாவில் பேசும் பொருள் ஆகியுள்ளது
