SSR

இந்தியாவிலேயே MLA பதவியை பெற்ற முதல் நடிகர்… SS ராஜேந்திரனின் அரசியல் என்ன தெரியுமா…?

By admin on கார்த்திகை 1, 2024

Spread the love

SS ராஜேந்திரன் தமிழ் சினிமாவில் பணியாற்றிய பம்பெறும் மூத்த நடிகர், இயக்குனர், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் அரசியல்வாதி ஆவார். இவரது இயற்பெயர் சேடப்பட்டி சூரியநாராயண ராஜேந்திரன் என்பதாகும். இவரை SSR என்றும் மக்கள் அழைத்தனர்.

   

ஆரம்பத்தில் நாடகங்களில் நடித்து வந்த SS ராஜேந்திரன் ஸ்ரீ ஆண்டாள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆரம்பத்தில் நெகட்டிவ் ரோல்களில் நடித்து வந்தார் SS ராஜேந்திரன். வில்லன் கதாபாத்திரத்தில் இருந்து நடிகராக நடிக்க ஆரம்பித்தார் SS ராஜேந்திரன். ராஜா ராணி தெய்வப்பிறவி ஆலயமணி பச்சை விளக்கு பூம்புகார் போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார் SS ராஜேந்திரன்.

   

எம்ஜிஆர் சிவாஜி கணேசன் ஜெமினி கணேசன் ஆகியோருக்கு இணையாக போற்றப்பட்டவர் SS ராஜேந்திரன். தனது அபாரமான நடிப்பு திறமையை வெளிப்படுத்தி மக்கள் மனதில் இடம் பிடித்து தனக்கென தனி ரசிகர்களை கொண்டிருந்தவர் SS ராஜேந்திரன். நடிக்கும் போதே எம்ஜிஆர் போல மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்று அரசியலில் பணியாற்றினார் SS ராஜேந்திரன்.

 

திராவிட முன்னேற்றக் கழகத்தின் கட்சியில் இணைந்து பணியாற்றினார் SSR. மக்களின் நீதிக்காக பல இடங்களில் குரல் கொடுத்தார் SS ராஜேந்திரன். 1962 ஆம் ஆண்டு சென்னை மாநில சட்டமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட்டு திமுக வேட்பாளராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சட்டமன்ற உறுப்பினராக இந்தியாவிலேயே பதவி வகித்த முதல் இந்திய நடிகர் SS ராஜேந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது. எம்ஜிஆர் கருணாநிதி ஆகியோருடன் நல்ல நட்புடன் இருந்து வந்து மக்களுக்காக தன் வாழ்நாளில் பல அரசியல் பணிகளில் ஈடுபட்டு வந்திருக்கிறார் SS ராஜேந்திரன்.