ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜயை ஓங்கி அறைந்த தந்தை SAC.. கடைசியில் விஜயகாந்திடம் போன பஞ்சாயத்து.. பிரபல வில்லன் நடிகர் சொன்ன ஷாக்கிங் தகவல்..

By admin on கார்த்திகை 24, 2023

Spread the love

நடிகர் விஜய், நாளைய தீர்ப்பு படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அவரது தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கிய இந்த படம், ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெறவில்லை. இதையடுத்து, விஜயகாந்த் நடிப்பில் செந்தூரபாண்டி என்ற படத்தை எடுத்தார். அதில் விஜயகாந்த் தம்பியாக விஜயை நடிக்க வைத்தார். விஜயகாந்த் பெரிய நடிகர் என்பதால், தன் மகன் விஜய்க்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகமும், வரவேற்பும் கிடைக்கும் என்பதால், இதை முன்கூட்டியே விஜயகாந்திடம் சொல்லிதான் படமே ஆரம்பித்தார்.

 Actor Ponnambalam

   

இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் நடிகர் பொன்னம்பலம் கூறியதாவது, ஒரு நாள் செந்தூரப்பாண்டி படப்பிடிப்பு நடந்துக்கொண்டிருந்த போது, ஹீரோ விஜயை, டைரக்டரான எஸ்ஏ சந்திரசேகரை ஓங்கி அறைந்தார். அந்த படத்தில் நான் வில்லனாக நடித்தேன். இந்த படத்தின் ஹீரோ அவர்தான். படப்பிடிப்பு தளத்தில் இப்படி அவரை அறைந்தால், அவருடன் நடிக்கும் ஹீரோயின் அவரை எப்படி மதிக்கும்? அப்பா, மகன் என்பதெல்லாம், உங்கள் வீட்டில் வைத்துக்கொள்ளுங்கள். அங்கு வீட்டில் உங்கள் மகனை பெல்ட்டால் கூட அடியுங்கள். இங்கே ஹீரோவையே நான் அடிப்பவன் என்ற நிலையில், வில்லன் என்னைக்கூட நீங்கள் அடிக்க நினைக்கலாம். அப்படி என்றால், இப்போதே நானும் போய்விடுகிறேன், என்று கோபமாக கூறினேன்.

   

 Actor Ponnambalam

 

உடனே இதுகுறித்து நடிகர் விஜயகாந்திடம் கூப்பிட்டு, எஸ்ஏ சந்திரசேகர் சொல்லி இருக்கிறார். அதற்கு, பொன்னம்பலம் சொல்வது சரிதான். நீங்கள் ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜயை அடித்திருக்க கூடாது. மகன் என்பதெல்லாம் வீட்டில்தான். படத்தில் அவர் ஹீரோ என்று எனக்கு ஆதரவாக பேசி இருக்கிறார். ஆனால் இன்று விஜய் இவ்வளவு பெரிய நடிகராக வளர்ந்து நிற்பதற்கு அவர் அப்பா போட்ட விதைதான் காரணம். விஜயை கோபுரமாக உயர்த்தியது அவரது அப்பா சந்திரசேகர்தான், என்று கூறியிருக்கிறார் நடிகர் பொன்னம்பலம்.