தன்னைவிட 3 வயது மூத்த நடிகையை திருமணம் செய்ய ஆசைப்பட்ட நடிகர் மாதவன்.. அவர் மிஸ் பண்ண அந்த நடிகை யார் தெரியுமா..?

By Begam

Updated on:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் மாதவன். இவர் 2000ல் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ‘அலைபாயுதே’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து மின்னலே, டும் டும் டும், கன்னத்தில் முத்தமிட்டால், ரன், அன்பே சிவம், ஆயுத எழுத்து, இறுதிச்சுற்று, விக்ரம் வேதா உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் பாலிவுட்டிலும் ரங் தே பசந்தி, குரு, 3 இடியட்ஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

   

தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பிற மொழி படங்களிலும் மாதவன் நடித்துள்ளார். நடிப்பை தாண்டி, ராக்கெட்ரி நம்பி எபெக்ட் திரைப்படத்தின் மூலம் ஒரு சிறந்த இயக்குனராகவும் , தயாரிப்பாளராகவும் மாதவன் உருவெடுத்தர். இந்த படம் தேசிய விருதையும் பெற்றது. பாலிவுட்டில் தனக்கென்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள மாதவன், தற்போது “தி ரயில்வே மென்” என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார். இது நெட்பிளிக்சில் வெளியாகவுள்ளது.

இந்த வெப் சீரிஸின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய நடிகர் மாதவன், ​​நடிகை ஜூஹி சாவ்லாவை தான் திருமணம் செய்ய விரும்பியதாக கூறியுள்ளார். அதாவது அந்த  செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது,  ‘நான் உங்களிடம் சொல்லியாக வேண்டும், மேலும் அனைவருக்கும் முன்பாக வாக்குமூலம் அளிக்க விரும்புகிறேன். கயாமத் சே கயாமத் தக் (QSQT), படத்தை பார்த்தபோது, ‘நான் ஜூஹி சாவ்லாவை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்’ என்று என் அம்மாவிடம் கூறியிருந்தேன். ஜூஹி சாவ்லாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதுதான் அப்போது எனது ஒரே நோக்கமாக இருந்தது’ என்று கூறியிருந்தார்.

மேலும் இந்த வெப் சீரிஸிலும் ஜூஹியுடன் என்னால் பணியாற்ற முடியவில்லை. அவரின் காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்ட பின்னரே என்னுடைய காட்சி படமாக்கப்பட்டது என்றும் மாதவன் தெரிவித்தார். தன்னை விட வயதில் 3 வயது மூத்த நடிகையை நடிகர் மாதவன் திருமணம் செய்ய விரும்பியதை, இவ்வளவு வெளிப்படையாக கூறியிருப்பது தற்பொழுது சமூக வலைத்தளங்களில் ஹாட் டாபிக்காக பேசப்பட்டு வருகிறது.