தமிழ் சினிமாவில் இன்றுள்ள வசூல் மன்னன்களில் முன்னணியில் இருப்பவர் நடிகர் அஜித். அமராவதியில் ஆரம்பித்த அவரின் திரைப் பயணம் இன்று விடாமுயற்சியில் உச்சத்தைத் தொட்டுள்ளது. முதலில் காதல் படங்களில் சாக்லேட் பாயாக வலம் வந்த அஜித் தீனா உள்ளிட்ட படங்களுக்கு பிறகு ஆக்ஷன் ரூட்டுக்கு மாறினார்.
90 களில் சாக்லேட் பாயாக வலம் வந்த அஜித் பல காதல் படங்களில் நடித்து பெண்களின் ஆசைநாயகனாக இருந்தார். அதன் பின்னர் வாலி திரைப்படத்தில் அவரை ஒரு ஸ்டைலிஷான வில்லனாகக் காட்டினார் எஸ் ஜே சூர்யா. அந்த படம் அஜித்துக்கு வேறொரு பரிணாமத்தைக் கொடுத்தது போல, எஸ் ஜே சூர்யாவுக்கு பிரேக்காக அமைந்தது.
அதன் பின்னர் எஸ் ஜே சூர்யா இயக்கிய குஷி திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகி, அதை தெலுங்கு மற்றும் இந்தியில் ரீமேக் செய்து மோஸ்ட் வாண்டட் இயக்குனர் ஆனார். அந்த சமயத்தில்தான் மீண்டும் அஜித்தோடு இணைந்து அவர் நியூ படத்தை இயக்க ஒப்பந்தம் ஆனார். அதற்கான போஸ்டர் எல்லாம் ரிலீஸானது.

Ajith and SJ Suryah
ஆனால் அந்த சமயத்தில் எஸ் ஜே சூர்யாவுக்கு ஒரு வித்தியாசமான ஆசை உருவாகியுள்ளது. நாம் சினிமாவுக்கு நடிக்கதானே வந்தோம். இப்போது இயக்குனராக நிரூபித்துவிட்டோம். அடுத்து நடிகர் ஆகிவிட வேண்டியதுதானே என நினைத்து அஜித்திடம் சென்று “சார், நான் இந்த படத்தில் நான் நடித்தால் சரியாக இருக்கும். ஒரு ஹீரோவாக நான் அறிமுகம் ஆக, இதுபோன்ற ஒரு காமெடி கதைதான் சரியாக இருக்கும்” எனக் கூறியுள்ளார்.
அதைக் கேட்ட அஜித் உடனடியாக அதற்கு சம்மதம் சொல்லி, அவர் சார்பாக தயாரிப்பாளரிடமும் பேசி அந்த படத்தில் எஸ் ஜே சூர்யாவையே நடிக்க வைக்க அவரை சம்மதிக்க வைத்துள்ளார். அப்படிதான் நியூ படத்தில் எஸ் ஜே சூர்யா நடிகராக அறிமுகமானது என்பது.
