கணவருடன் ஸ்கை டைவிங் செய்த சங்கீதா.. பார்க்கவே பயமா இருக்கே.. வைரலாகும் வீடியோ..!!

By Priya Ram on செப்டம்பர் 28, 2024

Spread the love

நடிகை சங்கீதா கடந்த 1997-ஆம் ஆண்டு ரிலீசான கங்கோத்ரி என்ற மலையாள திரைப்படம் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு தமிழில் கடந்த 1998-ஆம் ஆண்டு ரிலீசான காதலே நிம்மதி என்ற படம் மூலம் என்ட்ரி கொடுத்தார். தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி சங்கீதா பிசியாக நடித்துள்ளார்.

   

இந்நிலையில் உயிர், தனம், நேபாளி உள்ளிட்ட வித்தியாசமான கதை அம்சம் கொண்ட படங்களில் சங்கீதா நடித்துள்ளார். பிதாமகன் திரைப்படம் சங்கீதாவை பெரிய லெவலுக்கு கொண்டு சென்றது. அவரது நடிப்பு ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. சங்கீதாவின் நடிப்பிற்கு தமிழக அரசின் சிறந்த துணை நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. பிரபல பாடகரான கிரிஷை கடந்த 2009-ஆம் ஆண்டு சங்கீதா காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

   

 

இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் உள்ளார். திருமணத்திற்கு பிறகும் சங்கீதா குணச்சித்திர கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும் சின்னத்திரை நடன நிகழ்ச்சிகளில் சங்கீதா நடுவராக இருக்கிறார். முக்கியமாக விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியின் மூன்று சீசன்களிலும் சங்கீதா நடுவராக இருந்தார். பின்னர் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

இது மட்டுமில்லாமல் ஜீ தமிழில் ஒளிபரப்பான டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியிலும் நடுவராக வேலை பார்த்துள்ளார். சங்கீதாவும் கிரிஷும் நட்சத்திர தம்பதிகளாக வலம் வருகின்றனர். இந்த நிலையில் சங்கீதா தனது கணவர் க்ரிஷுடன் ஸ்கை டைவிங் செய்துள்ளார். அந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Sangitha Santharam (@sangithakrish)

author avatar
Priya Ram