இந்திய சினிமாவில் அதிக பாடல்களை பாடிய ஆண் பாடகர் என்ற பெருமைக்குரியவர் எஸ் பி பாலசுப்ரமணியன். இவர் 40,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்ட எஸ் பி பி சென்னையில் படிக்கும்போது பாடல்கள் பாடுவதில் ஆர்வம கொண்டு அதற்கான வாய்ப்புகளை தேடி வந்தார். அவருக்கு முதலில் பாட வாய்ப்புக் கிடைத்தது தெலுங்கு சினிமாவில்தான்.
1966-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மரியாதை ராமண்ணா என்ற படத்தின் மூலம் பாடகராக அறிமுகமான எஸ்.பி.பி 1969-ம் ஆண்டு தமிழில் ஹோட்டல் ரம்பா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால் இந்த படம் கைவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழில், சாந்தி நிலையம் என்ற படத்தில் இடம்பெற்ற இயற்கை என்னும் இளையகன்னி என்ற பாடல் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் பாடகராக அறிமுகமானார்.

SPB and Ilaiyaraaja
எம் ஜி ஆருக்காக ஆயிரம் நிலவே வா பாடலை பாடிய பின்னர் கவனிக்கப்படும் பாடகர் ஆனார். ஆனால் அவர் உச்சத்துக்கு சென்றது இளையராஜாவின் வருகைக்குப் பிறகுதான். இளையராஜா இசையில் அதிக பாடல்களை பாடிய பாடகர் என்றால் அது எஸ் பி பிதான். சில ஆண்டுகளுக்கு முன்னர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அவர் உயிரிழந்தார். அது இன்னமும் தமிழ் சினிமா ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு மரணமாக இருக்கிறது.
இந்நிலையில் சமீபத்தில் அவரின் மகனான எஸ் பி பி சரண் எஸ் பி பி பாடிய நிலாவே வா பாடல் பற்றி ஒரு சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்துள்ளார். அதில் “மௌன ராகம் படத்தில் இடம்பெற்ற நிலாவே வா பாடலின் போது ரெக்கார்டிங்கின் போது இளையராஜா சார், இயக்குனர் என யாருமே இல்லை. உதவியாளர்கள் பாடல் வரிகளைக் கொடுத்துள்ளனர். அதைப் பார்த்து மனப்பாடம் செய்துகொண்டு பாடிக் கொடுத்துள்ளார்.

Nilave vaa song in mouna Raagam movie
அதன் பின்னர் ஒருநாள் பாடலை ஒளியும் ஒலியும் நிகழ்ச்சியில் பார்த்துள்ளார். அந்த பாடலைப் பார்த்தால் அது சோகப்பாடலாக உள்ளது. ஆனால் நான் பாடும்போது, இது ஒரு சோகப்பாடல் என்றே என்னிடம் யாரும் சொல்லவில்லை. நான் ஒரு ரொமாண்டிக் பாடல் என்றுதான் நினைத்துப் பாடினேன். சோகப்பாடல் என்று தெரிந்தால் வேறு மாதிரி பாடியிருப்பேன் என சொல்லி வருந்தினார்” எனப் பகிர்ந்துள்ளார்.
