இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர் பல்வேறு சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ராதிகா தயாரிப்பில் ஒளிபரப்பாகும் கிழக்கு வாசல் என்ற சீரியலில் எஸ்.ஏ சந்திரசேகர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அந்த சீரியலில் ஜீவா நாயகனாகவும், பூவே பூச்சூடவா தொடரில் நடித்த பிரபலமான ரேஷ்மா கதாநாயகியாகவும் நடித்து வருகின்றனர்.

மேலும் அருண், தினேஷ், ஆனந்த் பாபு உள்ளிட்டோரும் சீரியலில் நடிக்கின்றனர். இந்நிலையில் கிழக்கு வாசல் சீரியல் இரவு 10 மணிக்கு பதிலாக மாலை 4 மணிக்கு ஒளிபரப்பாகும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. 4 மணிக்கு சீரியலை யார் பார்ப்பார்கள்? நேரத்தை இப்படி மாற்றியது சரியில்லை என சீரியல் நடிகர்கள் கோபத்தில் உள்ளனர்.

முக்கியமாக எஸ்.ஏ சந்திரசேகர் கடும் கோபத்தில் இருப்பதாக தெரிகிறது. மேலும் அவர் சீரியலில் இருந்து வெளியேற முடிவு செய்திருப்பதாகவும் சிலர் கூறுகின்றனர். ஆனால் அது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. இதுகுறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

