Connect with us

CINEMA

அப்பாவான ‘குக் வித் கோமாளி’ புகழ்…! என்ன குழந்தை தெரியுமா…? வாழ்த்துக்கள் கூறும் ரசிகர்கள்…!

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சிரிப்புடா’ என்ற நிகழ்ச்சியின் மூலம் முதல் முதலில் அறிமுகமானார் புகழ். பின்னர் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் பங்கேற்று இவருக்கு பெரும் புகழ் கிடைத்தது. விஜய் டிவியில் ஒளிபரப்பான மற்றொரு நிகழ்ச்சியான ‘காமெடி ராஜா கலக்கல் ராணி’ நிகழ்ச்சியிலும் இவர் கலந்து கொண்டார். இதை தொடர்ந்து அவருக்கு வெள்ளித்திரையில் கால் பதிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது. இதை எடுத்து அவர் அஜித்தின் ‘வலிமை’, அருண் விஜயின் ‘யானை’ உள்ளிட்ட படங்களிள் தற்போது நடித்து முடித்துள்ளார்.

   

இதைத் தொடர்ந்து தற்பொழுது ஜூ கீப்பர் என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த நிலையில் புகழ் தன்னுடைய நீண்ட நாள் காதலியான பென்சி என்பவரை ஐந்து வருடமாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புகழ் கோமாளியாக அசத்தி வந்தார். இந்நிலையில் புகழ் மனைவி பென்சி கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான விஷயத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

சமீபத்தில் புகழ் மனைவி பென்சியின் வளைகாப்பு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் விஜய் டிவி பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். தற்பொழுது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகழ் தனக்கு குழந்தை பிறந்திருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அந்த பதிவில் அவர் ‘இரு முறை தாய் வாசம் தெரிய வேண்டுமெனில் பெண் பிள்ளையை பெற்று எடுக்க வேண்டும் என்பார்கள். என் தாரத்தின் மூலமாக எனக்கு கிடைத்த மற்றொரு தாய் என் மகள். மகள் அல்ல, எங்கள் மகாராணி பிறந்திருக்கிறாள்.தாயும் சேயும் நலம்’ என்று குறிப்பிட்டுள்ளார். இப்பதிவினை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இதோ அந்த பதிவு…

 

View this post on Instagram

 

A post shared by Vijay Tv Pugazh (@vijaytvpugazh)

author avatar
Continue Reading

More in CINEMA

To Top