ஆடியோ லான்ச் ஏமாற்றம்…! சர்ப்ரைஸாக நள்ளிரவு 12 மணிக்கு கிலிம்ப்ஸ் வீடியோ வெளியிட்டு விருந்து வைத்த லியோ படக்குழு…!

By Begam on செப்டம்பர் 28, 2023

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர்  நடிப்பில் தற்பொழுது உருவாகி வரும் லியோ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆவலை ஏற்படுத்தி உள்ளது. இத்திரைப்படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜயுடன் த்ரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜூன், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகி வருகிறது.

   

இன்னும் சில நாட்களில் லியோ படம் வெளியாக உள்ளது. எனவே தொடர்ந்த லியோ படக் குழு அப்டேடை வெளியிட்டு வருகிறது. கிட்டத்தட்ட 14 வருடங்களுக்குப் பிறகு இந்தப் படத்தின் மூலம் விஜய் த்ரிஷா கூட்டணி சேர்ந்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. லியோ திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

   

 

இந்த நிலையில், ‘லியோ’ படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ‘லியோ’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் செப்டம்பர் 30-ம் தேதி நடைபெற இருப்பதாக கூறப்பட்டு வந்தது.  ஆனால் இந்த ஆடியோ லான்ச் திடீரென தடை செய்யப்பட்டது. ஏனெனில்  லியோ திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே இதுவரை 434 கோடி வரை பிசினஸ் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் உலக அளவில் லியோ திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய் வரை வசூல் செய்யும் என தகவல் வெளியானது. இந்த நிலையில் லியோ ஆடியோ வெளியீட்டு விழா நடத்த வேண்டாம் என்று முடிவு செய்துள்ளதாக பட தயாரிப்பு நிறுவனம் திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதாவது பாஸ்கள் கேட்டு அதிகப்படியான கோரிக்கைகள் வருவதாலும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் லியோ ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்த வேண்டாம் என்று முடிவு செய்துள்ளோம். இதற்குப் பின்னணியில் அரசியல் அழுத்தமும் மற்ற காரணங்களோ இல்லை என்று 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ நிறுவனம் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் ஆடியோ லான்ச்சில் ஏமாற்றம் அடைந்த விஜய் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக நள்ளிரவு 12 மணிக்கு கிலிம்ப்ஸ் வீடியோ வெளியிட்டு விருந்து வைத்துள்ளது லியோ படக்குழு. இதனை தற்பொழுது விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதோ அந்த கிலிம்ப்ஸ் வீடியோ…