மாதவன் நடிப்பில் கடந்த 2000-ஆண்டு வெளியான என்னவளே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் புன்னகை அரசி சினேகா. இவர் முன்னணி நட்சத்திரங்களான கமல்ஹாசன், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, தனுஷ் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார். கடைசியாக தமிழில் சினேகா பட்டாஸ் என்ற படத்தில் நடித்திருந்தார். இதனையடுத்து தளபதி 68 படத்தில் சினேகா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் சினேகா குறித்து கூறிய தகவல் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அவர் கூறியதாவது, சினேகா பிரசாந்துடன் இணைந்து விரும்புகிறேன் என்ற படத்தில் நடித்தார். அப்போது பாம்புகள் இருந்த கிணற்றில் என்னை இறக்கிவிட்டு நடிக்க வைத்து விட்டார் என கூறியதாகவும், அதற்கு அந்த படத்தின் இயக்குனர் மறுப்பு தெரிவித்து கிணற்று காட்சி பகுதி மிகவும் முக்கியம்.

அந்த கிணற்றில் பாம்புகள் இல்லை லைட்மேன்கள் கூட இருந்தும் அவர் நடிக்க மறுத்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. அதன் பிறகு அடுத்தடுத்த படங்களில் சினேகா நடித்த முன்னணி நடிகையாக வலம் வந்தார். இதேபோல புதுப்பேட்டை படத்தில் பாலியல் தொழிலாளி கேரக்டரில் நடிக்க ஏன் ஒப்புக்கொண்டேன் என நினைத்து சினேகா அழுதபோது அந்த படத்தின் கதாநாயகன் தனுஷ் சினேகாவுக்கு ஆறுதல் கூறியுள்ளார்.

இந்த கதாபாத்திரம் உங்களுக்கு நல்ல பெயரை வாங்கி கொடுக்கும் என தனுஷ் கூறியபடி புதுப்பேட்டை படம் சினேகாவுக்கு மறக்க முடியாத படமாக அமைந்தது. கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியான அச்சமுண்டு அச்சமுண்டு என்ற படத்தில் சினேகா பிரசன்னாவுடன் இணைந்து நடித்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டனர். இப்போது வரை நல்ல படங்களை தேர்வு செய்து சினேகா நடித்து வருவதாக மூத்த பத்திரிகையாளர் கூறியுள்ளார்.

