TRENDING
‘அவர் செட்டில் இருந்தால் நான் வரக்கூடாதாம்’… நடிகை நயன்தாரா பற்றி நடிகை மம்தா மோகன்தாஸ் அதிரடி(வீடியோ)..
இயக்குனர் கரு பழனியப்பன் இயக்கத்தில் 2006 இல் வெளியான ‘சிலப்பதிகாரம்’ படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மம்தா மோகன்தாஸ். இவர் தமிழில் மட்டுமல்ல மலையாளத்திலும் பிரபல நடிகையாக வலம் வந்தார். இவர் முதன் முதலில் 2005 இல் மயூகம் என்ற மலையாள திரைப்படத்தில் அறிமுகமானார். நடிகை மம்தா நடிகையாக மட்டுமின்றி திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் பின்னணி பாடகி என பன்முக திறமைகளை தன்னில் கொண்டவர்.
50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் இரண்டு முறை பிலிம் பார் விருது, 2006ல் தெலுங்கில் சிறந்த பின்னணி பாடகி மற்றும் 2010ல் மலையாளத்தில் சிறந்த நடிகை மற்றும் கேரள மாநில திரைப்பட விருது உட்பட பல விருதுகளை வென்றவர். இதைத் தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் பல திரைப்படங்களில் தற்போது நடித்துக் கொண்டு வருகிறார்.
தற்பொழுது 38 வயதான மம்தா மோகன் தாஸ் தோல் நிறமி இழத்தல் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வருகிறார். சமீபத்தில் நடிகை மம்தா மோகன்தாஸ் நடிகை நயன்தாராவை குறித்து பேட்டி ஒன்றில் பங்கேற்ற போது கூறிய விஷயம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அதாவது பி. வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் குசேலன். அந்த படத்தில் ரஜினியுடன் சேர்ந்து நடித்திருந்தார் நயன்தாரா.அந்த படத்தில் நடிக்க மம்தா மோகன்தாஸை ஒப்பந்தம் செய்திருந்தனர். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது, ‘குசேலன் படத்திற்காக 4, 5 நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டேன். ஆனால் படம் வெளியானபோது அதில் நான் இல்லை.
பாடல் காட்சி நடக்கவில்லை. வேறு ஒரு ஹீரோயின் டான்ஸ் ஆடினால் நான் நடிக்க மாட்டேன் என குசேலன் பட ஹீரோயின் கூறியதாக பின்னர் கேள்விப்பட்டேன். இது தான் நான் கேள்விப்பட்டது. இதை தான் என்னிடம் கூறினார்கள். இன்னொரு நடிகை இருப்பதால் நான் பயப்படவில்லை. அவங்க கேமராவை வைத்தபோதே நான் ஃபிரேமில் இல்லை என்பது தெரியும். அந்த பாடலில் என் பங்கு இல்லை. நான் 3, 4 நாட்கள் வீணடித்தது தான் மிச்சம். ஆனால் படம் ரிலீஸானபோது என்னுடைய பேக் ஷாட் இருந்தது. என் தொப்பியின் நுனி மட்டும் தெரிந்தது. என் முகம் தெரியாது. அதை பார்த்து தான் நான் ஷாக் ஆகிட்டேன். இதற்கு அவர் பதில் கூறுவார் என எதிர்பார்க்கிறேன்’ என கூறியுள்ளார்.