மதுரை மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் அவர்களின் உத்தரவை தொடர்ந்து சைபர் கிரைம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் டிஜிட்டல் அரெஸ்ட் மூலம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த கும்பலை சேர்ந்த ஆறு பேர் கேரளாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த நவம்பர் 10 ஆம் தேதி பாதிக்கப்பட்ட நபரை தொடர்பு கொண்ட மர்ம நபர், தன்னை மும்பை காவலர் விஜய் கண்ணா என்று அறிமுகப்படுத்தியுள்ளார். மனுதாரரின் பெயரில் போலி வங்கி கணக்கு தொடங்கிய பல கோடி ரூபாய் பரிவர்த்தனை நடந்துள்ளதாக கூறி மனுதாரர் மற்றும் அவருடைய மனைவியே டிஜிட்டல் அரெஸ்ட் செய்து அவர் மிரட்டியுள்ளார்.
அதேசமயம் வங்கி கணக்குகளை சரிபார்க்க வேண்டும் என்று கூறி மிரட்டிய அந்த கும்பல் மனுதாரரிடம் இருந்து சுமார் 60 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் பணத்தை தங்கள் வங்கி கணக்கிற்கு மாற்றம் செய்துள்ளனர். பணம் கேட்டு வற்புறுத்திய போது சந்தேகம் அடைந்த மனுதாரர் இது தொடர்பாக மதுரை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த வழக்கை விசாரித்த தனிப்படையினர், செல்போன் எண்கள் மற்றும் வங்கி கணக்குகளை ஆய்வு செய்ததில் குற்றவாளிகள் கேரளாவில் பதுங்கி இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அதன் பேரில் அங்கு சென்ற காவல்துறையினர் தேனியை சேர்ந்த உமர் பாரூக், முகமது ரியாஸ் மற்றும் கேரளாவை சேர்ந்த பைசல் ஹேக் உட்பட ஆறு பேரை அதிரடியாக கைது செய்தனர். இது போன்ற மோசடிகளில் ஈடுபடுவோர் மீது கமிஷன் பணத்துக்காக வங்கி கணக்குகளை தருவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர். மேலும் பொதுமக்கள் சைபர் புகார்களுக்கு 1930 என்ற எண்ணை அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தை அணுக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டு அரசியலில் தற்போது ஏற்பட்டுள்ள புதிய கூட்டணிக் கணக்குகளும், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வரவும் பாட்டாளி மக்கள் கட்சியை…
சமூக வலைதளங்களில் அவ்வப்போது மாணவர்களின் வினோதமான விடைத்தாள்கள் வைரலாவது வழக்கம். அந்த வகையில், தற்போது ஒரு மாணவனின் கணிதத் தேர்வு…
உத்தரகண்ட் மாநிலம் முசோரிக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் காரில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகளை சாலையில் வீசியதை, அனூப் நௌடியல் என்ற…
ஜெய்ப்பூரில் வசித்து வந்த பொதுப்பணித்துறை பொறியாளர் ஒருவர், தனது வீட்டில் வைத்து மனைவியைத் தாக்கியுள்ளார். அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில்,…
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில், 11 வயது சிறுமி ஒருத்தி தெருநாய்கள் கடித்துக் குதறியதால்…
அதிமுகவில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த உட்கட்சி பூசல் தற்போது ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. தமிழக வெற்றிக்…