பெண்களைப் பற்றி தரைகுறைவாக பேசி சர்ச்சையை ஏற்படுத்திய விஜயகாந்த் பட இயக்குனர்.. நீங்களே இப்படி பேசினா எப்டி..?

By Ranjith Kumar on பிப்ரவரி 20, 2024

Spread the love

இயக்குனர் பி வினோத் அவர்கள் இயக்கிய “என் பாசமே” படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் தற்போது நேற்று நடந்து முடிந்தது, இப்படத்தில் நடிக்கும் கதாபாத்திரம் அனைவரும் புதுமுகங்களே, இப்பட இசை வெளியீட்டு விழா நடைபெற்றதற்காக பல சிறப்பு விருந்தினர்களை அழைத்து இருந்தார்கள் அதில் முக்கியமாக மிகப்பெரிய இயக்குனர்கள் வருகை தந்திருந்தார்கள், இதில் மூத்த இயக்குனர் R.V உதயகுமார் கலந்து கொண்டிருந்தார், அவர் மேடையில் பெண்களைப் பற்றி தரகுறைவாக பேசியது மிகவும் சர்ச்சையாக ஆனது, இதற்காக சமூக வலைதளங்களில் பெரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

மூத்த இயக்குனரான R.V உதயகுமார் அவர்கள் இயக்கிய பல படங்கள் ஹிட் படங்கள், அதில் சின்ன கவுண்டர், பொன்னுமணி, சிங்காரவேலன் ஆகிய படங்கள் இதில் அடங்கும், சின்ன கவுண்டர் விஜயகாந்த் நடித்த படம் மாபெரும் வெற்றியைத் தந்தது, அதன் பின் எஜமானன் என்ற படத்தை ரஜினியை வைத்து மாபெரும் வெற்றியை தந்தார், இயக்குனர் பி வினோத் அவர்கள் இயக்கிய “என் பாசமே” படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் தற்போது நேற்று நடந்து முடிந்தது, அந்த மேடையில் R.V உதயகுமார் அவர்கள் பேசிய சர்ச்சை பேச்சு என்னவென்றால்,

   

மேடையில் ஒருவர் சொன்னார். பெண்ணியம் பேசுபவர்களே பெண்களை ஆபாசமாக காட்டுகிறார்கள் என்று. நான் சொல்கிறேன். பெண்கள் தங்களை தாங்களே அவுத்துப்போட்டு காண்பிக்கிறார்கள். பெண்களே ஏன் இப்படி அவுத்துப்போட்டு காட்டுறீங்க என்று அவர்களை பார்த்துதான் கேட்க வேண்டும். எப்படி எல்லாம் தெரியும்படி உடை அணிய வேண்டும் என்பதை பெண்கள் ஆராய்ச்சி செய்வார்கள் போல. தமிழ் சினிமாவைக்கூட காப்பாற்றிவிடலாம். ஆனால் முகநூல், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் பெண்கள் அவர்களாகவே வீடியோ எடுத்து போடுகிறார்கள். அதனை பார்ப்பவர்களை எப்படி காப்பாற்ற முடியும். தமிழர்களுக்கு மலையாளிகளை ரொம்பவே பிடிக்கும். ஆனால் அவர்களுக்குத்தான் தமிழர்களை பிடிக்காது. முன்பெல்லாம் மலையாளத்திலிருந்துதான் பிட்டை வாங்கி வந்து இங்கு ஓட்டுவார்கள்.

   

இப்பொழுது மலையாளத்தில் எப்படி நல்ல நல்ல படங்கள் எல்லாம் வருகிறதோ அதேபோல் முன்னதாகவது பிட் எடுப்பதிலும் அவர்கள் வல்லவர்கள் கைதேந்தவர்கள், அவர்களைப் போல் யாராலும் எடுக்க முடியாது, ஒரு முழு நீள படத்தில் எத்தனாவது ரீலில் பிட் வந்துள்ளது என்று தெரிந்து கொண்டு அதை மட்டும் பார்த்து பணம் மகிழ்ந்து சென்றவர்கள் பல உண்டு, என்று மிகவும் மோசமாக பெண்களை பற்றி தரை குறைவாக மூத்த இயக்குனர் ஆர்.வி உதயகுமார் மேடையில் பேசி உள்ளார், இதை கண்ட அங்குள்ள விருதுநர்களும் சரி பத்திரிகையாளர்களும் சரி ஒரு கண்டனமும் தெரிவிக்கவில்லை, ஆனால் தற்போது இணையத்தில் இவரின் வீடியோ வைரலாகி இதை கண்ட மக்கள் தன் கமெண்டின் மூலம் கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள்.