நடிகர் மைக் மோகனுக்கு அந்த கொடிய வியாதி இருக்குன்னு பரவிய வதந்தி… கிளப்பி விட்டது யார் தெரியுமா?

By vinoth

Updated on:

தமிழ் சினிமாவில் 80 களில் தொடர்ந்து பல ஹிட் படங்களைக் கொடுத்து வெள்ளி விழா நாயகனாக வலம் வந்தவர் மோகன். பல படங்களில் பாடகராக இவர் தோன்றி நடித்ததால் இவரை ரசிகர்கள் செல்லமாக மைக் மோகன் என்றே அழைத்து வந்தனர்.

கர்நாடகாவைப் பூர்விகமாகக் கொண்ட மோகனை பாலு மகேந்திரா தன்னுடைய கோகிலா திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகப்படுத்தினார். அந்த படம் தமிழ் நாட்டிலும் நன்றாக ஓடிய நிலையில் தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடிக்க தொடங்கினார்.

   

அவரின் மூடுபனி, பயணங்கள் முடிவதில்லை, கிளிஞ்சல்கள்,  நூறாவது நாள், மௌன ராகம் உள்ளிட்ட ஏராளமான படங்கள் வெள்ளிவிழாக் கண்டன. அதனால் ரஜினி, கமலுக்குப் பிறகு தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகராக விளங்கினார். ஆனால் காலத்துக்கு ஏற்ப மாறாமல் தொடர்ந்து காதல் படங்களிலேயே நடித்ததால் ஒரு கட்டத்தில் அவருக்கான மார்க்கெட் குறைய ஆரம்பித்தது.

80 களில் ஒரு ஆண்டுக்கு 10 படங்களுக்கு மேல் நடித்த அவருக்கு 90 களில் பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்நிலையில் திடீரென அவர் சினிமாவில் இருந்து காணாமல் போய்விட்டார். என்ன ஆனார் என்பதே பலருக்கும் தெரியவில்லை. இதற்கிடையில் அவருக்கு எய்ட்ஸ் நோய் வந்து இறந்தேவிட்டார் என்றும் வதந்தி கிளம்பியுள்ளது.

அதனாலும் அவரை தன்னுடைய படங்களில் நடிக்க வைக்க தயாரிப்பாளர்கள் தயங்கியுள்ளனர். இந்த வதந்தியை மோகனோடு ஒரு படத்தில் இணைந்து நடித்த நடிகைதான் கிளப்பிவிட்டார் என்றும் சொல்லப்படுகிறது.

இதனால் 10 ஆண்டுகளுக்கு மேல் காணாமல் போன மோகன் சுட்டப்பழம் என்ற படத்தின் மூலம் திரையுலகுக்கு எண்ட்ரி கொடுத்தார். அந்த படம் பெரியளவில் ஓடவில்லை. அதன் பின்னர் இப்போது ஹரா என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். விஜய்யின் கோட் படத்திலும் அவர் வில்லனாக நடிப்பதாக சொல்லப்படுகிறது.