பிரபல நடிகரான பிரகாஷ்ராஜ் கடந்த 1994-ஆம் ஆண்டு ரிலீசான டூயட் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இவர் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர். இவர் முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படத்தில் நடித்துள்ளார்.
தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். பிரகாஷ்ராஜ் இதுவரை 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது Net worth 50 கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.
சென்னை, பெங்களூர், ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் பிரகாஷ்ராஜுக்கு சொந்தமான வீடுகள் உள்ளது. ரியல் எஸ்டேட், தயாரிப்பு நிறுவனங்களில் பங்கு உள்ளதாம். கொடைக்கானலில் பண்ணை வீடும் இருப்பதாக தெரிகிறது. டுவிட்டரில் பிரகாஷ் ராஜுக்கு 2 மில்லியனுக்கும் அதிகமான பாலோவர்ஸ் உள்ளனர்.
வரலாற்று திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பிரகாஷ்ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். மேலும் புஷ்பா 2, தேவரா, ராயன் உள்ளிட்ட படங்களிலும் பிசியாக நடித்து கொண்டிருக்கிறார்.