கர்நாடகாவில் ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் அதிருப்தி முடிவுகளால் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது; தனது இண்டி தொகுதியை வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்காததை கண்டித்து ஆளுங்கட்சி எம்.எல்.ஏ யஷ்வந்த் ராயகெளடா பாட்டீல் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
ஏற்கனவே அமைச்சரவையில் இடம் கிடைக்காததால் கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி ராஜினாமா முடிவை எடுத்து பின்னர் வாபஸ் பெற்ற இவர், தற்போது மீண்டும் பதவி விலகல் முடிவை அறிவித்திருப்பது அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளையில், கதக் தொகுதி எம்.எல்.ஏ எச்.கே. பாட்டீலும் இதே பாணியில் தனது கோரிக்கைகளை நிறைவேற்ற அக்டோபர் 10 வரை அரசுக்கு கெடு விதித்திருப்பது ஆளுங்கட்சியினரிடையே பெரும் சலசலப்பை உருவாக்கியுள்ளது.
