பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலம் அருகே அதிகாலையில் நேரிட்ட கோர விபத்தில், காரில் பயணித்த நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் நடைபெற்ற சகோதரரின் திருமண விழாவை முடித்துவிட்டு காரில் சென்னை நோக்கித் திரும்பியபோது, எதிர்பாராதவிதமாக ஆம்னி பஸ் மீது கார் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
இதில் காரில் பயணித்த காளீஸ்வரன், பிரபாகரன், கார்த்தி மற்றும் அவரது மனைவி சூர்யா ஆகிய நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், பலத்த காயமடைந்த மேலும் நான்கு பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
