திடீரென உயிரிழந்த பிச்சைக்காரர்… பையைத் திறந்த போலீசுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… ஒட்டுமொத்த ஊர் மக்களையும் கலங்க வைத்த சம்பவம்…!

Spread the love

கேரள ஆலப்புழா மாவட்டம் சுற்றுவட்டார பகுதியில் அணில் கிஷோர் என்பவர் பொது மக்களிடம் பிச்சை எடுத்து வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த வாகனம் ஒன்று இவர் மீது மோதியதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். விபத்தில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததால் சிறப்பு சிகிச்சை அளிக்க வேண்டி இருந்த நிலையில் சிகிச்சையில் இருந்த அவர் யாருக்கும் தெரியாமல் மருத்துவமனையை விட்டு வெளியேறி தான் வழக்கமாக தங்கக்கூடிய இடத்திற்குச் சென்று படுத்துக்கொண்டார்.

ஏற்கனவே விபத்தில் சிக்கிய நிலையில் சரியான சிகிச்சை பெறாததால் அவர் அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே அவர் தங்கி இருந்த இடத்தில் இருந்த அவருடைய உடமைகளை போலீசார் கைப்பற்றி சோதனை செய்தபோது அங்கு இருந்த பைகளில் கட்டு கட்டாக பணம் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அந்தப் பைகளில் மொத்தம் 4,52,207 ரூபாய் பணம் இருந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் 12 சவுதி நாட்டு ரியால் பண நோட்டுகளும், பழைய 2000 ரூபாய் நோட்டுகளும் இருந்துள்ளன. இதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது கொடுக்கப்பட்ட முகவரியின் அடிப்படையில் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை போலீசார் தேடிய நிலையில் இதுவரை யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனைத் தொடர்ந்து அவருடைய பையில் இருந்த பணத்தை நீதிமன்றத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை கலங்க வைத்துள்ளது.

Nanthini

Recent Posts

நான் உன்னை விட்டு பிரிஞ்சி போனா என்ன பண்ணுவ..? தாய் கேட்ட அந்த கேள்வி… குழந்தை சொன்ன உருக்கமான பதில்… கியூட் வீடியோ வைரல் ..!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோவில், ஒரு தாய் தனது மூன்றரை வயது சிறுவனிடம், "நான் உன்னை…

19 minutes ago

BREAKING: தங்கப்பிரியர்களுக்கு குட் நியூஸ்..! கிராமுக்கு ரூ. 50 குறைந்து சவரன் ரூ. 1.14 லட்சத்திற்கு விற்பனை..!!

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்ரல் 22) சற்று சரிவைக் கண்டுள்ளது. கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன்…

22 minutes ago

போலி வீடியோக்களுக்கு முற்றுப்புள்ளி.. இனி AI வீடியோக்களில் ‘AI Generated’ லேபிள் கட்டாயம்… இனிமே யாரும் ஏமாற்ற முடியாது… மத்திய அரசு அதிரடி..!!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் வீடியோக்களில், அது 'AI-ஆல் உருவாக்கப்பட்டது' (AI Generated) என்ற லேபிளை வீடியோவின்…

40 minutes ago

“சுற்றுச்சுவர் இல்லை.. கழிவறை இல்லை” அதனால் பெண் பிள்ளைகளுக்கு அனுமதியில்லை… அரசுப் பள்ளியின் விசித்திரக் காரணத்தால் வெடித்த சர்ச்சை..!!

பஸ்தி மாவட்டத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட அரசுப் பள்ளியில் பெண் குழந்தைகளைச் சேர்க்க நிர்வாகம் மறுத்து வருகிறது. இதற்கு அவர்கள்…

43 minutes ago

பள்ளிக்கூடமா..? பாலியல் கூடமா..? ஒரே பள்ளியில் 20 பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை… அரசுப்பள்ளி ஆசிரியரின் லீலைகள் அம்பலம்…!!

சண்டிகரில் உள்ள அரசுப் பள்ளியில் பணியாற்றும் 20 பெண் ஊழியர்கள், சக ஆசிரியர் ஒருவர் தங்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக்…

46 minutes ago

அடக்கடவுள..! பால்கனி சுவரில் அமர்ந்து ரீல்ஸ் எடுத்த 14 வயது சிறுவன்… அடுத்த நொடியே அரங்கேறிய கொடூரம்… பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி..!!

ஐதராபாத்தில் சமூக வலைதளத்திற்காக 'ரீல்ஸ்' (Reels) வீடியோ எடுக்க முயன்ற 14 வயது சிறுவன், அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் இருந்து…

51 minutes ago