பிரதம மந்திரி கிசான் சம்சான் நிதி யோஷனா என்பது விவசாயிகளுக்கான இந்திய அரசின் ஒரு முக்கிய திட்டமாகும்.இது சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்குவதை நோக்கமாக வைத்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூபாய் 1000 கொடுக்கப்படுகிறது. இது ரூபாய் 2000 என்ற மூன்று சம தவணைகளில் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்படுகின்றன. இந்தத் திட்டம் டிசம்பர் 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு பிப்ரவரி மாதம் 2019 முதல் நாடு முழுவதும் செயல்படுத்தப்படுகிறது.
இதுவரை 20 தவணைகள் வழங்கப்பட்ட நிலையில் 21-வது தவணையான, தீபாவளிக்கு முன்பாக விவசாயிகள் வங்கிக் கணக்கில் வழங்கப்படும் எனக் கூறப்பட்டிருந்தது. ஆனால், பணம் வராததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்த நிலையில், அடுத்த வாரம் அல்லது நவம்பர் முதல் வாரத்தில் பணம் வங்கி கணக்கில் வரும் என்று தகவல் வெளியாகியுள்ளது. எனவே தவணை வங்கிக் கணக்கின் KYC-யை அப்டேட் செய்யாதவர்கள், உடனே அப்டேட் செய்துவிடுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
