ஒடிசா மாநிலத்தில் சிறுவன் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வந்த நிலையில் instagram-யில் லைக் பெறுவதற்காக பல வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளான். இந்நிலையில் தன்னுடைய தாயுடன் தட்சிண காளி கோவிலுக்கு தரிசனத்திற்காக சென்ற போது அந்த கோவில் அருகே உள்ள ரயில் நிலையத்திற்கு சிறுவன் சென்றுள்ளான். இந்த ஸ்டேஷன் அருகே இரும்பு மேம்பாலத்தில் ரயில்கள் செல்லும். இதனால் அதன் மீது ஏறி ரயில் வரும்போது ரீல்ஸ் எடுப்பதற்காக சிறுவன் முடிவு செய்து மேம்பாலத்தில் நின்றுள்ளான். சிறுவன் என்றதை கவனித்த ரயில் இன்ஜின் டிரைவர் ஹாரன் அடித்துள்ளார்.
ஆனால் சிறுவன் ரயில் தண்டவாளத்தை ஒட்டி நின்று கையில் செல்போன் வைத்துக்கொண்டு ரயில் முன்பு ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்தான். அப்போது பின்னால் வேகமாக வந்த ரயில் சிறுவன் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்ட சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரயில்வே போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரீல்ஸ் மோகத்தால் பரிதாபமாக சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
