கோவை மாவட்ட ஆவின் நிர்வாகம், மாதாந்திர பால் அட்டை வைத்துள்ள நுகர்வோருக்கு இதுவரை வழங்கி வந்த சிறப்புச் சலுகையை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. நாளை மறுநாள் முதல் இந்த புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது. இந்த சலுகை ரத்து காரணமாக, மாதாந்திர அட்டைதாரர்கள் இனி கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் மற்றும் நுகர்வோர்கள் தங்களுக்கான மாதாந்திர பால் அட்டைகளைப் புதுப்பிக்கவும், புதிய அட்டைகளைப் பெறவும் பிரதி மாதம் 11-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதிக்குள் ஆவின் நிறுவனத்தின் பிரத்யேக மொபைல் செயலி வழியாக விண்ணப்பித்துப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் சுமார் 16 லட்சம் லிட்டராக இருந்த ஆவின் நிறுவனத்தின் தினசரி பால் விநியோகம், தற்போது 13.5 லட்சம் லிட்டராகக் குறைந்துள்ளது. மேலும், கடந்த 2021-ஆம் ஆண்டில் 40 முதல் 45 லட்சம் லிட்டராக இருந்த தினசரி பால் கொள்முதல், தற்போது சுமார் 28 லட்சம் லிட்டராகக் குறைந்துள்ளதே ஆவினின் இந்தத் தட்டுப்பாட்டிற்கும், தேவைக்கான மாற்றங்களுக்கும் முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.
அதிமுகவில் நாளுக்கு நாள் உட்கட்சிப் பூசல்களும் நிர்வாகிகளின் வெளியேற்றமும் அதிகரித்துக் கொண்டே செல்வது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
தமிழ்நாடு அரசியலில் ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்துக்கும் எதிர்க்கட்சியான திமுகவுக்கும் இடையேயான மோதல் தற்போது சட்டமன்றத்தைத் தாண்டி சமூக வலைதளங்களில்…
கேரள மாநிலம் திருச்சூர் வெளியன்னூரில் உள்ள ஒரு தனியார் லாட்ஜில், ஜோதி (30) என்ற பெண் மற்றும் அவரது பச்சிளம்…
அதிமுகவில் திடீர் திருப்பமாக, கட்சியின் முக்கிய மூத்த தலைவர்கள் தங்களது பொறுப்புகளை ராஜினாமா செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை…
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே கடந்த ஜூன் 17-ம் தேதி வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி…
மெட்ரோ இரயிலில் பயணம் செய்த பெண் ஒருவர், 'How to Kill Men' (ஆண்களை எப்படிக் கொலை செய்வது) என்ற…