தமிழகம் முழுவதும் இனி இவர்களுக்கும் வங்கிக் கணக்கில் வருகிறது ரூ.1000.. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!

By Nanthini on ஆனி 18, 2025

Spread the love

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு சிறப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. பள்ளி குழந்தைகள் முதல் மகளிர் வரை அனைவருக்குமே தனித்தனி சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் உரியவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் சுமார் 1.10 கோடி பெண்களுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் உதவி தொகையை மாநில அரசு வழங்கி வருகின்றது.

இப்படியான நிலையில் தமிழகத்தில் HIV பாதித்த குழந்தைகளுக்கும் இனி மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என்று மாநில அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி அந்தத் திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து இனி எச்ஐவி பாதித்த குழந்தைகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.