கொரோனா எதிரொலி.. மீண்டும் தமிழகத்தில் லாக் டவுன்?.. TN அரசு திடீர் விளக்கம்..!

By Nanthini on ஆனி 18, 2025

Spread the love

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு என்பது கணிசமாக அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் பொது இடங்களில் முக கவசம் அணிய வேண்டும் எனவும் தமிழக சுகாதாரத் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா பாதிப்புக்கான அறிகுறிகள் ஏதாவது இருந்தால் உடனே மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

இப்படியான நிலையில் கொரோனா பரவும் காரணத்தால் தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் லாக் டவுன் பிறப்பிக்கப்படுவதாக அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்ததாக செய்திகள் இணையத்தில் பரவியது. இதனால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக தமிழக அரசின் உண்மை சரி பார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. லாக்டவுன் தொடர்பாக வெளியான செய்தி வதந்தி என்றும் 2022 இல் வெளியான அறிவிப்பை சிலர் மீண்டும் பரப்புகின்றனர் என்றும் உண்மை சரி பார்ப்பகம் மறுப்பு தெரிவித்துள்ளது.