காந்தாரா – 2 படப்பிடிப்பில் அடுத்தடுத்து நிகழ்த்த மரணம்.. உண்மையில் நடந்தது இதுதானா?.. தயாரிப்பாளர் திடீர் விளக்கம்..!

By Nanthini on ஆனி 18, 2025

Spread the love

கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான காந்தாரா திரைப்படம் பாராட்டுக்களை பெற்று இந்தியா முழுவதும் வசூலில் கலக்கியது. பதினாறு கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் சுமார் 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கிய வருகின்றது. இரண்டாம் பாகம் என சொன்னாலும் காந்தாரா கதையின் முன் கதை தான் தற்போது படமாக்குகிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது அடுத்தடுத்து படத்தில் நடித்த துணை நடிகர்கள் சிலர் மரணம் அடைந்தனர்.

Read all Latest Updates on and about kantara 2

   

கடந்த மே மாதம் கர்நாடக மாநிலத்தில் படபிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது துணை நடிகரான கபில் என்பவர் அங்குள்ள ஆற்றில் குளித்த போது ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் நடந்த ஒரு வாரத்திற்கு பிறகு படத்தில் நடித்து வந்த நடிகர் ராகேஷ் பூஜாரி மே 11ஆம் தேதி இரவு திருமண மெகந்தி நிகழ்ச்சியில் பங்கேற்ற போது மாரடைப்பால் உயிரிழந்தார். அடுத்து கடந்த ஜூன் 12ஆம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு இருந்த பிரபல மலையாள நடிகர் கலாபவன் நிஜு மாரடைப்பால் காலமானார்.

   

Read all Latest Updates on and about kantara 2

 

இப்படி அடுத்தடுத்து மூன்று காந்தாரா பட குழுவினர் உயிரிழந்த நிலையில் சமீபத்தில் படகு கவிழ்ந்து காந்தாரா பட ஹீரோ ரிஷப் செட்டி உள்ளிட்ட பட குழுவினர் 30 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பியதாகவும் ஒரு செய்தி வெளியாகி இருந்தது. இந்தச் செய்தி மேலும் பரபரப்பை கிளப்பு இருந்த நிலையில் இதனை நிர்வாகத் தயாரிப்பாளர் ஆதர்ஷ் மறுத்துள்ளார். படகு எதுவும் கவிழவில்லை என்றும் ஒவ்வொரு வதந்தியையும் காந்தாரா படத்துடன் இணைக்க வேண்டாம் என்றும் அவர் கூறியுள்ளார்.