மீண்டும் ஆண் நண்பருடன் கைதான ரவுடி பேபி சூர்யா.. ஆக்ஷினில் இறங்கிய போலீஸ்..!!

By admin on ஐப்பசி 13, 2023

Spread the love

யூடியூப் டிக் டாக் வீடியோக்களின் மூலம் பிரபலமானவர் ரவுடி பேபி சூர்யா. அவரது நிஜப்பெயர் சுப்புலட்சுமி. இவர் சமூக வலைதளத்தில் ஆபாசமாக பேசி வீடியோக்களை பதிவிட்டார். கடந்த ஜனவரி மாதம் கோவையைச் சேர்ந்த இளம் பெண் நடத்தி வந்த youtube சேனல் குறித்து ரவுடி பேபி சூர்யா ஆபாசமாக தகாத முறையில் பேசியுள்ளார்.

   

இதுகுறித்த புகாரின் பேரில் ரவுடி பேபி சூர்யா, அவரது நண்பர் சிக்கந்தர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஒரு ஆண்டு சிறையில் இருந்த சூர்யா கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார்.

   

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 22-ஆம் தேதி கோவையை சேர்ந்த இளம் பெண் ரவுடி பேபி சூர்யா, அவரது ஆண் நண்பர் சிக்கந்தர் உள்பட நான்கு பேர் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக மதுரை காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். மேலும் நான்கு பேரும் இளம் பெண்ணின் ஆபாச புகைப்படத்தை வெளியிடுவோம் என கூறி மிரட்டியுள்ளனர் . அந்த புகாரின் பேரில் ஒன்பது பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் ரவுடி பேபி சூர்யா, சிக்கந்தர் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.