லியோ படத்தால் சன் பிக்சர்ஸ் மீது கடும் கோபம்…. விஜய்யுடன் போட்டி போடுகிறாரா ரஜினி….?

By admin on ஐப்பசி 13, 2023

Spread the love

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படத்தினை ,எஸ். எஸ். லலித் குமார் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி ஆகிய இருவர் தயாரித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு லோகேஷ் கனகராஜ் அவர்கள்  திரைக்கதை அமைத்துள்ளார். இதில் சஞ்சய் தத் , த்ரிஷா , அர்ஜுன் , கௌதம் வாசுதேவ் மேனன் , மிஷ்கின் , மன்சூர் அலிகான் மற்றும் பிரியா ஆனந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.

   

 

   

இப்படமானது வருகின்ற அக்டோபர் 19ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில் தற்போது அந்த படத்திற்கு சிறப்பு காட்சிக்காக அரசிடம் இருந்து அனுமதி கிடைத்ததுள்ளது.

 

இதனை அறிந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், தான் நடித்த ஜெயிலர் படத்திற்கு இத்தகைய சலுகை வழங்க படாததால் அதிருப்தி அடைந்த அவர், ஜெயிலர் படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்க்கு தொலைபேசியில் அழைப்பு  விடுத்துள்ளார். அதில் அவர் ஜெயிலர் படத்திற்கு லியோ படத்தை போல் சிறப்பு காட்சிக்கு அனுமதி கிடைக்கவில்லை.

 

ஆனால் தற்பொழுது  இந்த சலுகை லியோ படத்திற்கு மட்டும் எவ்வாறு கிடைத்தது என்று தனது மனக்குறையை கூறி குமுறியுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விஜயை தனக்கு போட்டி இல்லை என்று கூறி வரும் நிலையில் ரஜினியின் இந்த செயல் கேள்விக்குரிய செயலாக உள்ளது என்று சினிமா விமர்சகரான பிஸ்மி கூறியுள்ளார்.