பிக் பாஸில் ஐஷுவிடம் உண்மையை உளறிய மணி… ‘எங்க வீட்டுக்கு தெரிஞ்சா அவ்ளோதான்’ பதறும் ரவீனா… வெளியான பரபரப்பு வீடியோ…

By Begam on ஐப்பசி 13, 2023

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோ பிக் பாஸ். இந்த  பிக் பாஸ் நிகழ்ச்சியானது தமிழில் 6 சீசன்களை கடந்து தற்போது 7வது சீசன் தொடங்கி ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த சீசனும் பரபரப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகின்றது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி 18 போட்டியாளர்களுடன் தொடங்கியது. முதல் வாரத்தில் அனன்யா ராவ் வெளியேற்றப்பட்டார்.

   

அதைத் தொடர்ந்து எழுத்தாளரும் நடிகருமான பவா செல்லதுரை உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் வெளியேறினார். தற்பொழுது 16 போட்டியாளர்கள் விளையாடி வருகிறார்கள். இந்த முறை வழக்கத்திற்கு மாறாக இரண்டு வீடுகள் இரண்டு நாமினேசன் என வித்தியாசமாக சென்று கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் நபர்கள் டாஸ்க் பங்கேற்கவும், ஸ்மால் பாக்ஸ் என்ற வீட்டில் இருக்கும் நபர்கள் சமைத்துக் கொடுப்பதும்என்று  இருந்து வருகின்றது. இந்த இரு வீட்டுக்குள் இருக்கும் நபர்கள் மாறி மாறி சண்டையிட்டு வருகின்றனர்.

   

 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக இருக்கும் ரவீனா மணி சந்திரா ஏற்கனவே வெளியில் நெருக்கமாக எடுத்திருந்த புகைப்படங்கள் வைரலாகி வந்தது.  இவர்கள் இருவரும் காதலர்கள் என்று வெளியே ரசிகர்களும் கூறி வந்த நிலையில், ரவீனாவின் அம்மாவும் பேட்டி ஒன்றில் மணியும் ரவீனாவும் நல்ல நண்பர்கள் என கூறியிருந்தார்.

இந்நிலையில் இந்த காதல் சர்ச்சைக்கு தற்பொழுது மணியே முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அவர் ஐஷுவிடம் தான் ரவீனாவை காதலிப்பது உண்மைதான் என்று கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து அங்கு வந்த ரவீனா ‘ உங்க வீடு மாதிரி எங்க வீடு கிடையாது. வீட்டுக்கு தெரிஞ்ச பெரிய பிரச்சனை ஆகிடும்’ என கூறுகிறார்.  தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ இதுதொடர்பான வீடியோ…