விமானத்தில் பிரபல நடிகையிடம் தவறாக நடந்து கொண்ட நபர்.. வைரலாகும் இணையதள பதிவு..!!

By admin on ஐப்பசி 13, 2023

Spread the love

மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் திவ்ய பிரபா. தமிழில் கயல், கோடியில் ஒருவன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை திவ்ய பிரபா விமான பயணத்தின் போது தனக்கு நடந்த கசப்பான அனுபவம் குறித்து சமீபத்தில் கூறியுள்ளார். அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவு சமீபத்தில் மும்பையில் இருந்து கொச்சிக்கு விமானத்தில் பயணித்தேன்.

   

 

   

விமானத்தில் இருந்த சக பயணி குடிபோதையில் பாலியல் ரீதியாக எனக்கு தொந்தரவு அளித்தார். இதுகுறித்து விமான பணிப்பெண்களிடம் புகார் அளித்தேன். ஆனால் விமான பணிப்பெண்கள் அதனை கண்டு கொள்ளவில்லை. ஆனால் நான் தொடர்ந்து அந்த பயணி நடந்து கொண்டது குறித்து கூறினேன். இதனால் எனது இருக்கையை மட்டும் மாற்றி விட்டு சென்றார்கள்.

 

இதனையடுத்து கொச்சை வந்ததும் விமான நிலைய அதிகாரிகளிடம் இது குறித்து புகார் அளித்தேன். மேலும் கேரளா போலீசாருக்கும் ஆன்லைன் மூலமாக புகார் அளித்துள்ளேன். பயணிகளின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். உரிய நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட விமான நிறுவன ஊழியர்கள் நடந்து கொண்ட விதம் அதிர்ச்சியாக உள்ளது என திவ்ய பிரபா கூறியுள்ளார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Divyaprabha (@divya_prabha__)